எங்கள் சேட்டிலைட்களை ரஷ்யா நாசம் செய்கிறது: ஜேர்மன் பாதுகாப்புத்துறை அமைச்சர் குற்றச்சாட்டு
ஜேர்மனியின் சேட்டிலைட்களுக்கு ரஷ்யா பாதிப்பை ஏற்படுத்துவதாக ஜேர்மன் பாதுகாப்புத்துறை அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
விண்வெளியில் போர்
ரஷ்ய சேட்டிலைட்களால் ஜேர்மன் சேட்டிலைட்களுக்கு அதிகரித்துவரும் அச்சுறுத்தல் குறித்து எச்சரித்துள்ளார் ஜேர்மன் பாதுகாப்புத்துறை அமைச்சரான போரிஸ் பிஸ்டோரியஸ்.
கடந்த சில ஆண்டுகளாக ரஷ்யாவும் சீனாவும் விண்வெளியில் போர் செய்வதற்கான தங்கள் திறனை அதிகப்படுத்தியுள்ளன என்று கூறியுள்ள போரிஸ், அவை சேட்டிலைட்களை மறைக்கலாம், சேட்டிலைட் இயக்கத்துக்கு இடையூறு ஏற்படுத்தலாம், கட்டுப்படுத்தலாம் அல்லது அழிக்கவும் செய்யலாம் என்றும் கூறியுள்ளார்.
இரண்டு ரஷ்ய சேட்டிலைட்கள் ஜேர்மன் பாதுகாப்புத்துறை பயன்படுத்தும் சேட்டிலைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கவலை உருவாகியுள்ள நிலையில், ஜேர்மன் பாதுகாப்புத்துறை அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |