சற்றும் யோசிக்காமல் எடுத்த முடிவால் ஜேர்மனியுடனான உறவை இழந்துள்ள ரஷ்யா
பின்விளைவுகளைக் குறித்து கொஞ்சம் கூட கவலைப்படாமல் உக்ரைனை ரஷ்யா ஊடுருவியதால், பல நாடுகளின் பகையை சம்பாதித்துக் கொண்டுள்ளது.
இன்னும் கூறப்போனால், நட்பு நாடுகளுடனான உறவை ரஷ்யா இழந்துள்ளது எனலாம்.
குறிப்பாக, ரஷ்யாவுடன் மோதலுக்கு பதிலாக தூதரக மற்றும் பொருளாதார உறவுகள் என சிறப்பு உறவை வைத்திருந்த ஜேர்மனியின் வரலாற்றுச் சிறப்பு மிக்க ரஷ்ய கொள்கை, ரஷ்யாவின் உக்ரைன் மீதான தாக்குதலால் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில், ரஷ்ய தாக்குதலைத் தொடர்ந்து ட்விட்டரில் செய்தி ஒன்றைப் பதிவிட்டுள்ளார் ஜேர்மன் சேன்சலரான Olaf Scholz.
அந்த செய்தியில், நிலைமை மிக மோசமாக உள்ளது, ஐரோப்பாவின் அமைதி, எல்லைகளை மாற்றக்கூடாது என்பதன் அடிப்படையில் அமைந்துள்ளது. அந்தக் கொள்கைக்கு நாம் மீண்டும் திரும்பவேண்டும். ஒரு நாட்டின் இறையாண்மை மதிக்கப்படவேண்டும். எல்லைகள் மாற்றப்படாது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜேர்மன் வெளியுறவு அமைச்சரான Annalena Baerbock இன்னும் கூடுதல் உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டவராக, உலகம் இந்த அவமானத்துக்குரிய நாளை மறக்காது. ஜேர்மனி அதிர்ச்சியில் உறைந்துள்ளது, ஆனால், கையறு நிலையில் அது இல்லை என்று கூறியுள்ள அவர், ரஷ்யா மீது மிகப்பெரிய தடைகளை அறிவித்துள்ளார்.
இதற்கிடையில், முன்னாள் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கலின் அரசில் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த Annegret Kramp-Karrenbauer, ஜேர்மனியின் கொள்கைத் தோல்விகளை ஒப்புக்கொண்டுள்ளார். ட்விட்டரில் ஆங்கிலத்தில் செய்தி ஒன்றைப் பதிவிட்ட அவர், புடினைத் தடுக்கும் வகையில் எதையும் செய்யத் தயாராக இல்லாததற்காக, தான் ஜேர்மனி மீது கோபத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
I'm so angry at ourselves for our historical failure. After Georgia, Crimea, and Donbas, we have not prepared anything that would have really deterred Putin.
— A. Kramp-Karrenbauer (@akk) February 24, 2022
இப்படியே ஜேர்மனியின் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் ரஷ்யா மீதான தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஜேர்மனி தனது எரிவாயுத் தேவையில் 55 சதவிகிதத்தை ரஷ்யாவிலிருந்துதான் இறக்குமதி செய்கிறது. ஆனாலும், ரஷ்யாவிலிருந்து எரிவாயு கொண்டு வரும் Nord Stream 2 திட்டத்தை கிடப்பில் போட முடிவு செய்துவிட்டார் ஜேர்மன் சேன்சலரான Olaf Scholz.
ஆக, Minsk ஒப்பந்தம் முதல், ஜேர்மனியுடனான உறவு வரை எதைக் குறித்தும் கவலைப்படாத ரஷ்ய அதிபர் புடின், ஜேர்மனியுடனான வரலாற்றுச் சிறப்பு மிக்க உறவை இழந்துவிட்டார் என்றே கூறலாம்.