பிரித்தானிய மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த திட்டமிடும் ஒரு நாடு... உளவுத்துறை வெளிப்படை
பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தெருக்களில் மிக மோசமான குழப்பத்தை ஏற்படுத்த ரஷ்ய உளவுத்துறை திட்டமிட்டு வருவதாக பிரித்தானியாவின் MI5 தலைவர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்
பிரித்தானியா எதிர்கொள்ளும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பான ஆண்டறிக்கையில் Ken McCallum இதை வெளிப்படுத்தியுள்ளார். உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு எதிராக பிரித்தானியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில்,
பிரித்தானியாவில் நெருப்பு வைத்தல், நாசவேலை, மிக ஆபத்தான நடவடிக்கைகளை முன்னெடுக்க ரஷ்ய உளவுத்துறை துணிந்து செயல்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி, 2022 முதல் ஈரான் ஆதரவு சுமார் 20 சதித்திட்டங்களை MI5 முறியடித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இணையமூடாக தீவிரவாத நடவடிக்கைகளுக்கு இளம் வயதினர் அதிக எண்ணிக்கையில் ஈர்க்கப்படுவதாக குறிப்பிட்டுள்ள Ken McCallum,
43 எண்ணிக்கையில்
தீவிரவாத செயல்பாடுகளுக்காக விசாரிக்கப்பட்டவர்களில் 13 சதவிகிதம் பேர்கள் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 2017 முதல் பிரித்தானியாவில் ஆயுதம் ஏந்திய தாக்குதல்கள் மற்றும் வெடிகுண்டு சம்பவங்கள் என 43 எண்ணிக்கையில் முறியடிக்கப்பட்டுள்ளது.
மேலும், MI5 விசாரிக்கப்பட்ட உள்ளூர் அச்சுறுத்தல்களின் எண்ணிக்கை 48 சதவிகிதம் அதிகரித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்ய போருக்கு பின்னர் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட ரஷ்ய தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கை 750 கடந்துள்ளது.
இதில் பெரும்பாலானோர் ரஷ்ய உளவாளிகள் என்றே Ken McCallum தெரிவித்துள்ளார். மட்டுமின்றி, பிரித்தானியா மற்றும் அதன் நட்பு நாடுகளால் உளவாளிகள் என அடையாளம் காணப்பட்ட ரஷ்ய தூதுவர்களுக்கு இராஜதந்திர விசா மறுக்கப்பட்டது. மேலும், ரஷ்ய நடிகர்களும் உளவு வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |