ட்ரம்பின் 30 நாட்கள் ரஷ்ய எண்ணெய் சலுகையை நிராகரித்த பிரித்தானியா: சொன்ன காரணம்
ஈரான் நெருக்கடியை அடுத்து ரஷ்ய எண்ணெய் வாங்க ட்ரம்ப் அளித்துள்ள 30 நாட்கள் சலுகையை பிரித்தானியா நிராகரித்துள்ளது.
தற்காலிக விலக்கு
ஈரான் போர் சூழலில் ரஷ்ய எண்ணெய் வாங்கினால் அது உக்ரைனுக்கு எதிரான போருக்கு நாம் உதவுவது போலிருக்கும் என்றே எரிசக்தி துறை அமைச்சர் மைக்கேல் ஷாங்க்ஸ் எச்சரித்துள்ளார்.

ஈரான் மீதான போரை அடுத்து ஏற்பட்டுள்ள எண்ணெய் நெருக்கடியை எதிர்கொள்ள, டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம், கடலில் பயணித்துக்கொண்டிருக்கும் ரஷ்ய எண்ணெய் மற்றும் பெட்ரோலை வாங்குவதற்கான கட்டுப்பாடுகளை நீக்கி, ஒரு தற்காலிக விலக்கை வழங்கியது.
ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போரின் விளைவுகள் குறித்த அச்சம் அதிகரித்து வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஈரான் மீதானப் போரை அடுத்து வரையறுக்கப்பட்ட அளவிலேயே எண்ணெய் விநியோகம் உள்ளது; இது உலகம் முழுவதும் எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகளைத் திடீரென உயரச் செய்துள்ளது.
உலக எரிசக்திச் சந்தைகளில் நிலைத்தன்மையை ஊக்குவிக்கும் வகையில், ஏப்ரல் 11 வரை இது ஒரு குறுகிய கால நடவடிக்கை என்று அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் விளக்கமளித்துள்ளார்.
எந்த நாடும் ரஷ்ய எண்ணெயை இந்த 30 நாட்களில் வாங்கலாம் என்ற ட்ரம்பின் இந்த அறிவிப்பை ரஷ்யா முழு மனதாக வரவேற்றுள்ளது. கிட்டத்தட்ட 125 மில்லியன் பீப்பாய் ரஷ்ய கச்சா எண்ணெய் தற்போது கப்பல்களில் பயணப்பட்ட நிலையில் உலகின் 30 பகுதிகளில் உள்ளது.

மாற்றிக்கொள்ள மாட்டோம்
ஆனால், இந்த 30 நாட்கள் விலக்கால் புடினுக்கு எந்த ஆதாயமும் கிடைக்க வாய்ப்பில்லை என்றே ஸ்காட் பெசென்ட் விளக்கமளித்துள்ளார். ஈரான் போருக்கு மத்தியில் விளாடிமிர் புடினைத் தொடர்புகொண்ட ட்ரம்ப், எண்ணெய் நெருக்கடி தொடர்பில் விவாதித்திருக்கலாம் என்றே கூறப்படுகிறது.

ஈரான் மீதான போர் தொடங்கியதில் இருந்து எண்ணெய் விலை 50 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது. தற்போது ரஷ்ய எண்ணெய் விலக்கு தொடர்பில் அமைச்சர் ஷாங்க்ஸ் நேரடியாக ட்ரம்பை விமர்சிக்கவில்லை.
ஆனால், ரஷ்யா மீதான எங்களின் தடைகள் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்பதில் பிரித்தானியா மிகவும் தெளிவாக உள்ளது என்றும், இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி அவர்களின் நலிவுற்ற பொருளாதாரத்தின் சில பகுதிகளைச் சீர்செய்ய நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் அவர் வாதிட்டுள்ளார்.

மேலும், ரஷ்யா மீதான எங்கள் தடைகளைத் தொடர்ந்து கடைப்பிடிப்போம்; கடத்தல் கப்பல் (shadow fleet) தொடர்பாக நாங்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளையும் தொடர்வோம். இது குறித்த எங்கள் நிலைப்பாட்டை நாங்கள் துளியும் மாற்றிக்கொள்ள மாட்டோம் என்றும் அமைச்சர் ஷாங்க்ஸ் பதிலளித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |