ஜேர்மனி ஊடகத்திற்கு தடை! சட்டவிரோதமானது என அறிவித்த ரஷ்யா
ரஷ்யாவின் நீதி அமைச்சகம் ஜேர்மனி ஒளிபரப்பு நிறுவனமான Deutsche Welle-வை விரும்பத்தகாத அல்லது சட்டவிரோதமானது என்று அறிவித்துள்ளது.
விரும்பத்தகாத அமைப்பு
ஜேர்மனியின் Deutsche Welle ஊடகம் ரஷ்யாவில் தனது சேவையை வழங்கி வருகிறது. 
இந்த ஊடகத்தினை "விரும்பத்தகாத" அமைப்பு என செவ்வாயன்று ரஷ்யாவின் நீதி அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது ஒளிபரப்பாளர் ரஷ்யாவில் செயல்படுவதைத் தடை செய்கிறது.
மேலும், ரஷ்ய சட்டத்தின் கீழ் இதுபோன்ற அறிவிப்பு வெளியான நிறுவனத்துடன் தொடர்புடையவர்கள் என கண்டறியப்பட்டவர்கள், நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை எதிர்கொள்வார்கள்.
சிறைத்தண்டனை
அதேபோல், அமைப்பின் தலைவர்கள் 6 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அனுபவிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், DW (Deutsche Welle) ஊடகத்தின் இயக்குநர் ஜெனரல் பார்பரா மாசிங் (Barbara Massing) "ரஷ்ய அரசாங்கத்தால் தணிக்கை செய்யப்பட்டு எங்கள் சேவைகளைத் தடுத்த போதிலும், DWயின் ரஷ்ய மொழி சேவை இப்போது முன்பை விட அதிகமான மக்களை சென்றடைகிறது" என ஒரு அறிக்கையில் கூறினார். 
இதற்கிடையில், DW மீதான தடையை கண்டித்த ஜேர்மனி அரசாங்கம், உக்ரைனுக்கு எதிரான ஆக்கிரமிப்புப் போர் பற்றிய அச்சம் ரஷ்யாவிற்கு இருப்பதாக குற்றம்சாட்டியது. 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |