புடின் - மோடி சந்திப்பு: தடையற்ற எரிபொருள் விநியோகம்: இந்தியாவுக்கு வழங்க ரஷ்யா உறுதி
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் இந்திய சுற்றுப் பயணத்தை முன்னிட்டு இருநாடுகளுக்கு இடையிலான பொருளாதார பங்களிப்பு விரிவாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தடையற்ற எரிபொருள் விநியோகம்
இந்தியா-ரஷ்யா இடையிலான வலுவடைந்து வரும் இருதரப்பு உறவை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, வேகமாக வளர்ந்து வரும் இந்திய பொருளாதாரத்தை ஆதரவளிக்கும் விதமாக, தடையற்ற எரிபொருள் ஏற்றுமதியை வழங்க ரஷ்யா தயாராக இருப்பதாக அந்நாட்டின் ஜனாதிபதி விளாடிமிர் புடின் வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.
மேலும் இந்த ராஜதந்திர சந்திப்பில், இரு நாடுகளும் பல்வேறு துறைகளுக்கான பல முக்கிய ஒப்பந்தங்களை இறுதி செய்துள்ளன.
மிகப்பெரிய துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்கு திட்டமிட்ட கல்லூரி மாணவன்: பறிமுதல் செய்யப்பட்ட பயங்கர ஆயுதங்கள்
இவற்றில், உரங்கள் மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகியவை உள்ளடக்கிய வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒப்பந்தங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் கடல்சார் தளவாடங்கள் ஆகியவை தொடர்பான ஒப்பந்தங்கள் முக்கிய இடம் பெற்றுள்ளன.

பொருளாதார ஒத்துழைப்பு திட்டம்
இந்த உயர்மட்ட பேச்சுவார்த்தையில், 2030 ஆண்டு வரையிலான வர்த்தக விரிவாக்கம் தொடர்பான பொருளாதார ஒத்துழைப்பு திட்டத்தை இரு நாடுகளும் ஒப்புக் கொண்டு இருப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், யுரேசிய பொருளாதார ஒன்றியத்துடனான தற்போதைய சுதந்திர பொருளாதார முன்னேற்றம் குறித்தும் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |