தக்க பதிலடி கொடுப்போம்... ஜேர்மனிக்கு ரஷ்யா எச்சரிக்கை
Berlin blames Russia for attempted drone attack at Leipzig, Russia responds: ஜேர்மன் விமான நிலையமொன்றில் ட்ரோன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் ஜேர்மனி ரஷ்யா மீது குற்றம் சாட்ட, ரஷ்யா அதற்கு பதிலடி கொடுத்துள்ளது.
சென்ற மாதம் ஜேர்மனியின் Leipzig விமான நிலையத்தில் வெடிபொருட்களுடன் இணைக்கப்பட்ட ட்ரோன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ரஷ்யா மீது குற்றச்சாட்டு
விடயம் என்னவென்றால், Leipzig விமான நிலையம், ஜேர்மன் ராணுவம் மற்றும் நேட்டோ ராணுவத்துக்கான ராணுவ தளவாடங்கள் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் விமான நிலையம் ஆகும்.

அதுமட்டுமின்றி, உக்ரைனும் ரஷ்யாவும் மாறி மாறி ட்ரோன்கள் மூலம் தாக்கிக்கொள்ளும் சூழலில், அந்த விமான நிலையம், உக்ரைன் நாட்டின் Antonov ஏர்லைன்ஸ் விமானங்களின் தளமாகவும் செயல்படுவதாலேயே, அங்கு ட்ரோன்கள் காணப்பட்ட விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், அங்கு வெடிபொருட்களுடன் இணைக்கப்பட்ட ட்ரோன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பில், ஜேர்மனி வெளிப்படையாகவே ரஷ்யா மீது குற்றம் சாட்டியுள்ளது.

அத்துடன், ஜேர்மன் வெளியுறவு அமைச்சரான Johann Wadephul, ஜேர்மனியின் Bonn நகரில் அமைந்துள்ள ரஷ்ய தூதரகத்தையும், பெர்லினில் அமைந்துள்ள கலாச்சார மையத்தையும் மூட உத்தரவிட்டுள்ளார்.
ஜேர்மனிக்கு ரஷ்யா எச்சரிக்கை
ஜேர்மனியின் நடவடிக்கை மற்றொரு தவறு, அது சீரியஸான தவறு என ரஷ்ய ஜனாதிபதியான புடின் கூறியுள்ள நிலையில், ஜேர்மனியின் நடவடிக்கைகளுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எதிர்பார்க்கப்பட்டதுபோலவே, ரஷ்யா முழுவதுமுள்ள ஜேர்மன் கலாச்சார மையங்களை மூட இருப்பதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சரான செர்கே லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
ஆக, ஜேர்மனி ரஷ்யா இடையிலான மோதல் மும்முரமாகிவருகிறது!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |