ஜேர்மனி மீண்டும் போரை விரும்புகிறது - ரஷ்யா குற்றச்சாட்டு
Russia says Germany wants war again: ஜேர்மனி மீண்டும் போரை விரும்புகிறது என ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.
ஜேர்மனி மீது ரஷ்யா குற்றச்சாட்டு
ஜேர்மனி மீது ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
லீப்சிக் விமான நிலையத்தில் நடந்த ட்ரோன் தாக்குதலுக்கு ரஷ்யா காரணம் என ஜேர்மனி கூறியதை அவர் முற்றிலும் நிராகரித்தார்.

ஜேர்மனி, ரஷ்யா கீழ்மட்ட முகவர்கள் மூலம் வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலை நடத்தியதாக குற்றம் சாட்டியது.
இதனை “ஹைப்ரிட் தாக்குதல்” எனக் கூறி, பெர்லின் ரஷ்ய கலாச்சார மையத்தை மூடியது. அதேபோல், ரஷ்யாவும் ஜேர்மனியின் கலாச்சார மையங்களை மூடியது.
“இது உண்மையான போரின் தொடக்கம். இரண்டாம் உலகப்போருக்கு முந்தைய நிலைமை போல, ஜேர்மனி மீண்டும் போரை விரும்புகிறது” என லாவ்ரோவ் கூறியுள்ளார். மேலும், ஜேர்மனியை “நாசிசம்” என குற்றம் சாட்டி, “ரஷ்யா தேவையான முடிவுகளை எடுக்கும்” என எச்சரித்த்துள்ளார்.
ஜேர்மனி தற்போது உக்ரைனின் முக்கிய கூட்டாளியாக இருப்பதால், இந்த குற்றச்சாட்டுகள் ஐரோப்பிய நாடுகளில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா-ஜேர்மனி உறவு மோசமடைந்துள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ரஷ்ய தூதர்களை அழைத்து விளக்கம் கேட்டுள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |