உளவு பார்க்கும் பிரிட்டிஷ் கவுன்சில்... ஆசிரியர்களை குறிவைத்த ரஷ்யா
ரஷ்யாவை குறைமதிப்பிற்கு உட்படுத்த பிரிட்டிஷ் கவுன்சிலை மறைப்பாகப் பயன்படுத்துவதாக ரஷ்யாவின் பெடரல் பாதுகாப்பு சேவை (FSB) பிரித்தானிய உளவு அமைப்பு மீது குற்றம் சாட்டியது.
முதன்மையான எதிரியாக
அத்துடன் லண்டன் தொண்டு நிறுவனத்துடன் ஒத்துழைத்த முன்னணி பல்கலைக்கழகங்களின் ஆசிரியர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் FSB கூறியது.
மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக உக்ரைனில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்யாவிற்கும் தற்போதைய ட்ரம்ப் நிர்வாகத்திற்கும் இடையே ஒரு புதிய நல்லிணக்கம் உருவானதை அடுத்து ரஷ்ய அதிகாரிகளின் முதன்மையான எதிரியாக பிரித்தானியா மாறியுள்ளது.
கலாச்சார உறவுகள் மற்றும் கல்வி வாய்ப்புகளுக்கான இங்கிலாந்தின் சர்வதேச அமைப்பு என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் பிரிட்டிஷ் கவுன்சில், தங்களது செயற்பாடுகளை நிறுத்த கடந்த 2018ல் ரஷ்ய நிர்வாகம் கட்டாயப்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளது.
மேலும், பிரிட்டிஷ் கவுன்சிலுடனான அனைத்து ஒத்துழைப்பிற்கும் ரஷ்யா தடை விதித்திருப்பது ஏமாற்றமளிப்பதாக பிரிட்டிஷ் கவுன்சில் தெரிவித்துள்ளது. உளவு வேலைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும் பிரிட்டிஷ் கவுன்சில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ரஷ்யாவின் மிகவும் சக்திவாய்ந்த அமைப்புகளில் ஒன்றான FSB வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், நான்கு ரஷ்ய பிராந்தியங்களில் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் சிலர் பிரிட்டிஷ் கவுன்சிலுடன் ஒத்துழைத்ததை அடையாளம் கண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
ஒத்துழைப்பிற்கும் தடை
மட்டுமின்றி, ரஷ்ய அடையாளத்தை அழிக்கவும், செல்வாக்கு மிக்க முகவர்களின் உலகளாவிய இணைப்பை உருவாக்கவும் பிரித்தானிய உளவுத்துறை பிரிட்டிஷ் கவுன்சிலைப் பயன்படுத்தி வருகிறது என்றும் FSB தெரிவித்துள்ளது.
மேலும், பிரிட்டிஷ் கவுன்சிலுடனான ஒத்துழைப்பு குறித்து 15 ரஷ்ய குடிமக்களுக்கு உத்தியோகப்பூர்வமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், பிரிட்டிஷ் கவுன்சிலைத் தடை செய்யுமாறு கேட்டுக்கொண்டதுடன், குடிமக்கள் அதனுடன் எந்தத் தொடர்பும் கொள்ள வேண்டாம் என்றும் எச்சரித்ததாகவும் FSB தெரிவித்துள்ளது.
ஜூன் 5 ஆம் திகதி முதல் ரஷ்ய அரசாங்கம் பிரிட்டிஷ் கவுன்சிலுடனான அனைத்து ஒத்துழைப்பிற்கும் தடை விதித்துள்ளது. 1934 இல் நிறுவப்பட்ட பிரிட்டிஷ் கவுன்சில், முதலில் பிற நாடுகளுடனான உறவுகளுக்கான பிரிட்டிஷ் குழு என்று அழைக்கப்பட்டது.
பாசிசம் மற்றும் கம்யூனிசத்தின் எழுச்சிக்கு மத்தியில் பிரித்தானியாவின் கலாச்சார உறவுகள் மற்றும் கல்வி வாய்ப்புகளை பரப்புவதற்கு ஒரு கருவியாக பயன்படுத்தப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |