ஜேர்மனிக்கு பதிலடி! ரஷ்யா அறிவிப்பு
ஜேர்மன் ஊடகத்திற்கு எதிரான பதிலடி நடவடிக்கைகளை ரஷ்யா அறிவிக்கும் என ரஷ்ய வெளியுறவுத்துறை கூறியதாக மேற்கோள்காட்டி RIA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக ரஷ்யா சேனலான RT-யின் ஜேர்மன் மொழி சேனலை நாட்டில் ஒளிபரப்ப ஜேர்மன் ஊடக ஒழுங்குமுறை ஆணையமான MABB தடை விதித்தது.
RT DE செர்பிய உரிமத்தைப் பயன்படுத்தி ஜேர்மனியில் ஒளிபரப்ப முடியாது என்று ஜேர்மனியின் MABB மற்றும் ஊடக நிறுவனங்களின் உரிமம் மற்றும் மேற்பார்வை ஆணையம் (ZAK) கூறியது.
ஜேர்மனியின் தடையை எதிர்த்து RT DE புரொடக்ஷன்ஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக RT துணை ஆசிரியர் அன்னா பெல்கினா தெரிவித்தார்.
இந்நிலையில், ரஷ்ய சேனலான RT-யின் ஜேர்மன் மொழி சேனலை தடை செய்ததற்காக ஜேர்மனிக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று ரஷ்யா அறிவித்துள்ளது.
இந்த பதிலடி, ரஷ்யாவில் அங்கீகாரம் பெற்ற ஜேர்மன் ஊடகங்கள் மற்றும் இணைய இடைத்தரகர்கள் ஆகியவற்றை பாதிக்கும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.