உக்ரைனுக்கு ஜேர்மனி வழங்கிய 1500 'ஸ்டெர்லா' ஏவுகணைகள்!
ஜேர்மனி உக்ரைனுக்கு இராணுவ உதவி வழங்குவதாக உறுதியளித்தபடி, ஆயுதங்கள் உக்ரைனுக்கு வழங்கப்பட்டதாக ஜேர்மன் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டியன் ஹாஃப்மேன் கூறினார்.
ஜேர்மன் பிரஸ் ஏஜென்சியின் அறிக்கைகளின்படி, ஜேர்மனியிலிருந்து 1,500 "ஸ்ட்ரெலா" ஏவுகணைகள் (anti-air missiles) மற்றும் 100 MG3 இயந்திர துப்பாக்கிகள் (machine guns), கூடுதலாக 8 மில்லியன் தோட்டாக்கள் வந்துள்ளன என்று உக்ரைனிய அரசாங்கத்தின் ஆதாரம் தெரிவிக்கிறது.
MG3 இயந்திர துப்பாக்கிகள் Bundeswehr-ன் (ஜேர்மனியின் ஆயுதப் படைகள்) நிலையான துப்பாக்கியாகும், இது பல படைகளின் அமைப்புகளால் பயன்படுத்தப்படுகிறது. இது நிமிடத்திற்கு 1300 ரவுண்டுகள் சுட முடியும் மற்றும் 1200 மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கும். கூடுதலாக, மூன்று மில்லியன் 5.56 காலிபர் தோட்டாக்கள் ஆயுதப்படைகளுக்கு வழங்கப்பட்டன.
ஜேர்மனி ஏற்கனவே 500 "ஸ்ட்ரெலா" வான் எதிர்ப்பு ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்கியிருந்தது. ஜேர்மனியின் இராணுவம் ஏற்கனவே உக்ரேனிய வீரர்களுக்கு 1,000 டாங்கி எதிர்ப்பு ஆயுதங்களையும் (anti-tank weapon), 500 ஸ்டிங்கர் வகை surface-to-air ஏவுகணைகளையும் வழங்கியுள்ளது.
ஜேர்மனி முன்பு அனுப்பிய ஆயுதங்கள்
முன்னதாக, ரஷ்ய படையெடுப்பை முறியடிப்பதில் உக்ரைனுக்கு உதவ ஜேர்மனி மேலும் 2,000 டாங்கி எதிர்ப்பு துப்பாக்கிகளை உக்ரைனுக்கு அனுப்பும் என்று அறிவிக்கப்பட்டது.
உக்ரைனின் எல்லைக்கு அருகே ரஷ்யப் படைகள் குவிந்தபோது, ஜேர்மனி ஆயுதங்களை அனுப்பத் தயங்கியது, ஆனால் கடந்த மாதம் ரஷ்ய ஊடுருவல் தொடங்கிய பின்னர், அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் தனது மூலோபாயத்தை மாற்றினார்.
ரஷ்ய விமானங்களை கைப்பற்றிய பிரித்தானியா!
நேட்டோ ரஷ்யாவுடன் நேரடி இராணுவ மோதலில் ஈடுபடாது:
ஸ்கோல்ஸ் உக்ரைன் மீதான படையெடுப்பு தொடர்பாக நேட்டோ ரஷ்யாவுடன் நேரடி இராணுவ மோதலில் ஈடுபடாது, அதற்குப் பதிலாக, மாஸ்கோ மீதான பொருளாதாரத் தடைகளைத் தொடர்ந்து கடுமையாக்கும் என்றும் ஷோல்ஸ் வலியுறுத்தினார்.
ஜேர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை உடனடியாக போரை முடிவுக்கு கொண்டு வருமாறு வலியுறுத்தினார். உக்ரைன் மீதான தாக்குதல் உக்ரைனை அழிப்பது மட்டுமல்லாமல் ரஷ்யாவின் எதிர்காலத்தையும் அழிக்கிறது என்பதை அவர் உணர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.