முதல் தாக்குதல் பிரான்ஸ் படைவீரர்கள் மீதுதான்: ரஷ்யா எச்சரிக்கை
பிரான்ஸ் வீரர்கள் உக்ரைன் ரஷ்யப் போரில் பங்கேற்பதற்காக உக்ரைன் செல்வார்களானால், அவர்கள்தான் முதன்மை இலக்காக தாக்கப்படுவார்கள் என ரஷ்யா எச்சரித்துள்ளது.
உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் பிரான்ஸ்
உக்ரைன் ரஷ்யப் போரில், உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்துவரும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், மேற்கத்திய கூட்டாளி நாடுகள் போரில் உக்ரைனுக்கு உதவியாக தங்கள் படைவீரர்களை களமிறக்கவேண்டுமென தொடர்ந்து வலியுறுத்திவருகிறார்.
இந்த விடயம் புடினுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்திவருகிறது.
ரஷ்யா எச்சரிக்கை
இந்நிலையில், பிரான்ஸ் படைவீரர்கள் போரில் பங்கேற்பதற்காக உக்ரைனுக்கு அனுப்பப்பட்டால், அவர்கள்தான் முதன்மை இலக்காக இருப்பார்கள் என ரஷ்ய உளவுத்துறைத் தலைவரான Sergei Naryshkin எச்சரித்துள்ளார்.
எந்த வெளிநாட்டு படையினராவது போரில் பங்கேற்பதற்காக உக்ரைனுக்கு அனுப்பப்பட்டால், அவர்கள்தான் முதன்மை இலக்காக ரஷ்ய ராணுவத்தால் தாக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார் அவர்.
இதன் பொருள் என்னவென்றால், ரஷ்ய எல்லைக்குள் வாளுடன் கால் வைக்கும் அனைத்து பிரான்ஸ் படைவீரர்களும் தாக்கப்படுவார்கள், அதுதான் அவர்களுடைய தலைவிதியாக இருக்கும் என்று கூறியுள்ளார் Sergei Naryshkin.