ரஷ்யாவுக்கு துணை நிற்காதே: சீனாவை எச்சரிக்கும் ஜேர்மனி
ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வழங்க வேண்டாம் என சீனாவை ஜேர்மனி எச்சரித்துள்ளது.
உக்ரைனுக்கு உதவி - ஜேர்மனி உத்தரவாதம்
உக்ரைனுக்கான நிலையான அமைதியை ஏற்படுத்தித் தருவதற்கு எதிர்கால பாதுகாப்பு உத்தரவாதங்கள் குறித்து ஜேர்மனியும் அதன் நட்பு நாடுகளும் உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் (Olaf Scholz) இன்று (வியாழக்கிழமை) ஜேர்மன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இந்த போரில் உக்ரைன் வெற்றிகரமாக தன்னைத் தற்காத்துக் கொள்ளும் என்ற அனுமானத்துடன் இதுபோன்ற பாதுகாப்பு உத்தரவாதங்களைத் தருவதாக ஓலாஃப் ஷோல்ஸ் கூறினார். மேலும், ஜேர்மனி தொடர்ந்து உக்ரைனுக்கு ஆயுத விநியோகத்துடன் ஆதரிக்கும் என்று அவர் கூறினார்.
Reuters
உக்ரைனிலிருந்து ரஷ்யா தனது படைகளை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் முன்வைத்த ஷோல்ஸ், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை என்று கூறினார்.
சீனாவுக்கு எச்சரிக்கை
அதேநேரம், உக்ரேனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு ஆயுதம் தந்து உதவுவ கூடாது என சீனாவை அவர் எச்சரித்தார். பதிலாக, "ரஷ்யாவை போரிலிருந்து பின்வாங்கவைக்க உங்கள் செல்வாக்கைப் பயன்படுத்துங்கள்" என்று சீனாவை ஷால்ஸ் வலியுறுத்தினார்.
ரஷ்யா உக்ரைன் மீதான படையெடுப்பைத் தொடங்கி ஒரு வருடத்திற்குப் பிறகு ஷோல்ஸ் இவ்வாறு பேசியுள்ளார். இது ஜேர்மன் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கையில் ஒரு புதிய சகாப்தத்தை காட்டுகிறது.
ஜேர்மனி தனது சொந்த இராணுவத்தில் முதலீடுகளை அதிகப்படுத்தியுள்ளது, ரஷ்யாவுடனான அதன் பொருளாதார உறவுகளை முறித்துக் கொண்டது மற்றும் போர் பகுதிகளுக்கு ஆயுதங்களை அனுப்புவதில் அதன் தடைகளை உடைத்துள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.