ரஷ்ய உக்ரைன் போரில் கேரளாவைச் சேர்ந்தவர் உயிரிழப்பு: தாய் கண்ணீர் கோரிக்கை
ரஷ்ய உக்ரைன் போரில், இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரளாவைச் சேர்ந்தவர் உயிரிழப்பு
கேரளாவைச் சேர்ந்தவரான பினில் என்பவர் ரஷ்யாவில் எலக்ட்ரிஷியன் வேலைக்காக ரஷ்யா சென்ற நிலையில், அங்கு ஏற்கனவே பணி செய்துகொண்டிருந்த தனது சகோதரரான ஜெயினை (27) சந்தித்துள்ளார்.
எலக்ட்ரிஷியன் வேலை கொடுப்பதாக அழைத்துச் செல்லப்பட்ட அவர்களுடைய பாஸ்போர்ட்கள் பிடுங்கப்பட்டு, அவர்கள் இருவரும் உக்ரைனிலிருக்கும் ரஷ்ய ராணுவத்தினருக்கு உணவு முதலான அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் பணிக்காக அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
#WATCH | 'We are ready to appeal to anyone...': Binil's family speaks to Republic after he was killed while fighting in the Russia-Ukraine War.
— Republic (@republic) January 14, 2025
.
.
.#Kerala #BinilTB #BinilMother #RussiaUkraineWar pic.twitter.com/Z2pynrdv9O
ஆனால், உக்ரைனில் போரிட ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டதால், பினிலுக்கும் ஜெயினுக்கும் ஆயுதங்கள் வழங்கப்பட்டு, குறைந்தபட்ச பயிற்சியும் அளிக்கப்பட்டு போரிட அனுப்பப்பட்டுள்ளார்கள்.
இருவரும் போரில் காயமடைய, பினில் கடந்த வாரம் உயிரிழந்துள்ளார். உயிர் பிழைத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெயின், வாட்ஸ் ஆப் மூலமாக தனது தாயிடம் பேசியுள்ளார்.
பினில் உயிரிழந்த செய்தி கேட்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ள நிலையில், அவரது தாய், பினிலுடைய உடலையும், ஜெயினையும் இந்தியாவுக்குக் கொண்டு வர உதவுமாறு அரசியல்வாதிகளுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.