உக்ரைனுக்கு ஆயுத உதவி... ஜேர்மனியின் புதிய தலைவர் மீது ரஷ்யா விமர்சனம்
உக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்குவது தொடர்பில் ஜேர்மனியின் அடுத்த சேன்ஸலர் தெரிவித்துள்ள கருத்து ரஷ்ய தரப்பில் விமர்சனத்தை உருவாக்கியுள்ளது.
ஜேர்மனியின் புதிய தலைவர் மீது ரஷ்யா விமர்சனம்
விரைவில் ஜேர்மனியின் சேன்ஸலராக பதவியேற்க இருக்கும் பிரெட்ரிக் மெர்ஸிடம், உக்ரைனுக்கு Taurus ஏவுகணைகளை வழங்குவீர்களா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த மெர்ஸ், இது ஐரோப்பா ஒன்றிணைந்து ஒப்புதலளித்து செய்யவேண்டிய விடயம். அப்படி ஐரோப்பா சம்மதிக்குமானால், ஜேர்மனியும் அதில் பங்கேற்கும் என்று பதிலளித்தார்.
பதவி ஏற்கும் முன்பே மெர்ஸ் கூறியுள்ள இந்த கருத்து ரஷ்ய தரப்புக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தவில்லை என்பது தெரிகிறது.
காரணம், கிரெம்ளின் செய்தித்தொடர்பாளரான டிமிட்ரி பெஸ்கோவ், மெர்ஸின் கருத்துக்களிலிருந்து, அவர் வலிமையான நிலைப்பாட்டை எடுப்பார் என்றே தோன்றுகிறது.
ஆனால், ஜேர்மனியின் நிலைப்பாடு உக்ரைன் சூழலை மேலும் மோசமடையும் நிலைக்குதான் கொண்டு செல்லும்.
துரதிர்ஷ்டவசமாக, ஐரோப்பிய தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கான வழிகளைத் தேடுவதுபோல் தெரியவில்லை. போரைத் தொடர்வதுதான் அவர்கள் விருப்பம்போல தெரிகிறது என விமர்சித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |