இன்னும் பலர் உயிரிழப்பார்கள்: ரஷ்யா பிரான்சுக்கு எச்சரிக்கை
பிரான்ஸ் அரசு உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க முடிவு செய்துள்ள விடயம் ரஷ்யாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்சுக்கு ரஷ்யா விடுத்துள்ள எச்சரிக்கை
ரஷ்யா உக்ரைனுக்கிடையிலான போரில், பிரான்ஸ் அரசு உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க முடிவு செய்துள்ள விடயத்தால் எரிச்சலடைந்துள்ள ரஷ்யா, பிரான்சுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரான்ஸ் பின்விளைவுகளைக் குறித்து முன்பின் யோசிக்காமல் முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ள ரஷ்யா, உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க பிரான்ஸ் எடுத்துள்ள முடிவு போரின் தீவிரத்தை மேலும் அதிகரிக்கும் என எச்சரித்துள்ளது.
உக்ரைனில் ஏற்கனவே ஏராளமான பொதுமக்கள் போரில் கொல்லப்பட்டுள்ள நிலையில், போரின் தீவிரம் அதிகரிக்குமானால் நிலைமை இன்னமும் மோசமாகும் என்று கூறியுள்ளார் ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளரான Maria Zakharova.
மேலும் பலர் உயிரிழக்கக்கூடும்
பிரான்ஸ் அதிகாரிகளின் முடிவை பொறுப்பற்ற செயலாக தாங்கள் பார்ப்பதாக தெரிவித்துள்ள Maria, பிரான்ஸ் மேலும் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதால், போரின் தீவிரத்தன்மை அதிகரித்து பொதுமக்கள் உட்பட மேலும் பலர் உயிரிழக்கக்கூடும் என்றும் கூறியுள்ளார்.