பிரான்சின் Nuclear Umbrella திட்டம் - ரஷ்யா எச்சரிக்கை
ரஷ்யா தனது முதன்மை இலக்கு பட்டியியலில், பிரான்சின் Nuclear Umbrella திட்டம் வைக்கப்படும் என எச்சரித்துள்ளது.
ஐரோப்பாவின் மீது Nuclear Umbrella என அழைக்கப்படும் அணு ஆயுத பாதுகாப்பை அமைக்கும் திட்டத்தை பிரான்ஸ் முயற்சித்து வருகிறது.
இந்நிலையில், எதிர்காலத்தில் கடுமையான மோதல்கள் ஏற்பட்டால், ரஷ்யாவின் முதன்மை இலக்குப் பட்டியலில் பிரான்சின் அணு குடை சேர்க்கப்படும் என ரஷ்ய துணை வெளிவிவகார அமைச்சர் அலெக்சாண்டர் குருஷ்கோ எச்சரித்துள்ளார்.
பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த பேட்டியில், “பிரான்ஸ் தனது அணு ஆயுதங்களை அணு சக்தி இல்லாத மற்ற ஐரோப்பிய நாடுகளில் நிறுவும் வாய்ப்பு குறித்து எங்கள் இராணுவம் தீவிர கவனம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இது எங்கள் பாதுகாப்பு திட்டங்களில் முக்கியமானதாக கருதப்படும்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மார்ச் மாத தொடக்கத்தில், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான், பிரான்சின் அணு ஆயுதங்களை அதிகரிக்கும் திட்டத்தையும், ஐரோப்பிய கூட்டாளிகளுடன் தடுப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் முயற்சியையும் அறிவித்திருந்தார்.
அவர், பிரான்சின் அணு நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ள Ile Longue கடற்படை தளத்தில் இருந்து இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
ரஷ்யாவின் இந்த எச்சரிக்கை, ஐரோப்பாவில் பாதுகாப்பு சூழ்நிலையை மேலும் பதற்றமடையச் செய்யும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
#Russia #France #NuclearUmbrella #Macron #Geopolitics #EuropeSecurity #BreakingNews #Moscow