பிரான்சுக்கு மலையேற்றத்துக்குச் சென்ற வெளிநாட்டுப் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்
ரஷ்ய நாட்டவரான பெண்ணொருவர் பிரான்சில் மலையேற்றத்துக்குச் சென்ற நிலையில், சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
ரஷ்ய சுற்றுலாப்பயணி ஒருவர், பிரான்சிலுள்ள ஆல்ப்ஸ் மலையில் மலையேற்றத்துக்குச் சென்ற நிலையில், மாயமானார்.
மாயமான சுற்றுலாப்பயணி
தனது 60 வயதுகளிலிருக்கும் அந்த ரஷ்யப் பெண், செவ்வாயன்று, ஆல்ப்ஸ் மலையிலுள்ள Mont Blanc என்னும் மலையில் தனியாக மலையேற்றத்துக்குச் சென்றுள்ளார்.

ஆனால், மாலையில் அவர் தான் தங்கியிருந்த ஹொட்டலுக்குத் திரும்பாததால் அதிகாரிகளுக்கு தகவலளிக்கப்பட்டுள்ளது.
அவரைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்ட நிலையில், வியாழன்று அவரை உயிரற்ற நிலையில்தான் கண்டுபிடிக்க முடிந்துள்ளது.
அந்தப் பெண்ணின் மொபைலிலிருந்து வந்த சிக்னலை வைத்து அவரைத் தேடும்போது, அவர் பனிப்பாறை ஒன்றிலிருந்த பிளவுக்குள் விழுந்து உயிரிழந்துகிடந்தது தெரியவந்துள்ளது.
அதாவது, கோடையின்போது பனிப்பாறைகளில் பிளவுகள் உருவாகும். ஆனால், அந்த பிளவுக்கு மேல் ஒரு அடுக்கு பனி படர்வதால், பனிக்கு அடியில் பிளவு ஏற்பட்டுள்ளது வெளியிலிருந்து தெரியாமல் இருக்கக்கூடும்.
அப்படிப்பட்ட ஒரு இடத்தில் நடந்து செல்லும்போது, அந்தப் பெண் அந்த பனிப்பாறை பிளவுக்குள் விழுந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |