குகையில் மகள்களுடன் வசித்தது எப்படி? ரஷ்யா பெண் சொன்ன காரணம்
கர்நாடக குகையில் குழந்தைகளுடன் வசித்தது குறித்து ரஷ்யா பெண் பேசியுள்ளார்.
குகையில் ரஷ்யா பெண்
கர்நாடக மாநிலம், கோகர்ணா வனப்பகுதியில் உள்ள ராமதீர்த்தா மலைக் குகை ஒன்றில், 40 வயதான ரஷ்யப் பெண் நீனா தனது 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்ததை காவல்துறையினர் 2 நாட்களுக்கு முன்னர் கண்டறிந்தனர்.
கடும் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக அந்த பகுதியில் காவல்துறையினர் ரோந்து பனி மேற்கொண்டனர்.
அப்போது, குகையின் வாசலில் துணிமணி காயப்போட்டிருப்பதை கண்டு, குகையின் உள்ளே பார்த்த போது, தங்க நிற முடி கொண்ட, வெள்ளை நிற சிறுமி வெளியே வந்துள்ளார்.
தொடர்ந்து குகையின் உள்ளே சென்ற போது, நீனா தனது மற்றொரு குழந்தையுடன் இருப்பதை கண்டு காவல்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
#GokarnaPolice of #uttarakannada found a #Russianwoman #Nina_Kutina and her daughters aged #6and4years living in a #cave in a forest, Her #Visa had expired way back in 2017 and was #overstaying. She has been referred to #FRROfor deportation.#pramod #gokarna pic.twitter.com/XsF2U8CxqB
— Pramod (@pramodankolaVK) July 12, 2025
இந்த குகையில் விசப்பாம்புகள் இருப்பதால், தங்குவதற்கு பாதுகாப்பான இடம் இல்லை என வெகுநேரமாக கூறியதற்கு பிறகு, அங்கிருந்து வெளியேற ஒப்புக்கொண்டனர்.
பாம்புகள் நண்பர்கள்
நீனா 2016 அக்டோபர் 18 முதல் 2017 ஏப்ரல் 17 வரை வணிக விசாவில் இந்தியாவில் இருந்தார். விசா காலாவதியான பிறகு, நேபாளம் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று மீண்டும் இந்தியா திரும்பியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், நாங்கள் இங்கு ஆபத்தாக உணரவில்லை. பாம்புகள் எங்களின் நண்பர்கள் போல் தான் இருந்தது. நாம் அவற்றைத் தொந்தரவு செய்யாவிட்டால் அவை நமக்குத் தீங்கு விளைவிக்காது.
நாங்கள் வசிக்கும் குகை மனித குடியிருப்பில் இருந்து வெகு தொலைவில் இல்லை. இந்த குகை மிகப்பெரியதாகவும், அழகானதாகவும் இருந்தது. அருகே உள்ள நீர்வீழ்ச்சிகளில் நீந்தி கொண்டிருப்போம்" என தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணர் தன்னை தியானம் செய்ய அனுப்பியதாகவும், நான் தவம் செய்து வருவதாகவும் கவால்துறையினரிடம் தெரிவித்துள்ளார். அங்கிருந்த பாண்டுரங்க விட்டல் சிலையை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.
குழந்தைகளின் தந்தை யார்?
தேவையான உணவுகளை வைத்திருந்தார். நூடுல்ஸை பெரும்பாலும் பயன்படுத்தியுள்ளனர். விறகுகளை பயன்படுத்தி சமைத்துள்ளனர். மெழுகுவர்த்தி இருந்தாலும் அதை அரிதாகவே பயன்படுத்தினர்.
அவர் ஆங்கிலம் பேசுகிறார், ஆனால் அவருடைய மொபைல் போன் அமைப்புகள் ரஷ்ய மொழியில் இருந்தன. அவர் குழந்தைகளுக்கான அட்டவணையை வைத்திருந்தார்.
அதில் வரைதல், பாடுதல், மந்திரங்கள் ஓதுதல், யோகா மற்றும் பிற பயிற்சிகள் அடங்கும். காலையில், அவர் தனது குழந்தைகளுக்கு யோகா கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
அந்த பெண் குழந்தைகள் இருவரும் இந்தியாவில் பிறந்ததாக கூறியுள்ளார். அதேவேளையில் அந்த குழந்தைகளின் தந்தை குறித்து எந்த தகவலையும் தெரிவிக்க மறுத்து விட்டார்.
தற்போது ஆசிரமத்தில் அவர் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரை நாடு கடத்துவதற்கான சட்டபூர்வ பணிகள் நடைபெற்று வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |