பிரான்சை விட்டு வெளியேறுங்கள்: ரஷ்ய விமர்சகர் ஃபெடோரோவா-க்கு அரசு உத்தரவு
ரஷ்ய அரசியல் விமர்சகரை நாட்டை விட்டு வெளியேறுமாறு பிரான்ஸ் அரசு உத்தரவிட்டுள்ளது.
ரஷ்ய விமர்சகரை வெளியேற்றிய பிரான்ஸ்
ரஷ்யா தொடர்பான ஆதரவு பிரச்சாரங்களை பிரெஞ்சு ஊடகங்களில் பரப்பி வந்ததாக குற்றம்சாட்டப்பட்ட ரஷ்ய அரசியல் விமர்சகர் செனியா ஃபெடோரோவா(Xenia Fedorova) உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு பிரான்சின் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் அமைதியை குலைக்கும் வகையில், ரஷ்யாவின் பரப்புரையை திட்டமிட்டு ஃபெடோரோவா பரப்பி வந்ததாக பிரான்ஸ் நாட்டின் Libération நாளிதழ் தெரிவித்துள்ளது.
AFP செய்தி நிறுவனத்தின் தகவல் படி, பிரான்ஸ் அரசின் வெளியேற்ற உத்தரவை அடுத்து, ஃபெடோரோவா தற்போது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ரஷ்யா டுடே-வின் ஊடக தலைவர்
2022ம் ஆண்டு உக்ரைனுக்கு எதிரான போர் தீவிரமடைவதற்கு முன்பு, அதாவது பல்வேறு கட்ட தடைகள் விதிக்கப்படுவதற்கு முன்பு ஃபெடோரோவா பிரான்ஸில் உள்ள ரஷ்யா டுடே(RT) ஊடகத்தின் தலைவராக பணியாற்றியுள்ளார்.
தடைக்கு பிறகு நாட்டை விட்டு வெளியேறாத ஃபெடோரோவா, அங்கே தங்கி பிரான்ஸ் கோடீஸ்வரர் வின்சென்ட் பொல்லோரே(Vincent Bolloré) ஊடக நிறுவனத்தில் ஒளிபரப்பு அலைவரிசைகளில் விமர்சகராக பணியாற்றி வந்துள்ளார்.
'Le Journal du Dimanche' பத்திரிகையில் கட்டுரைகள் எழுதி வந்த ஃபெடோரோவா, உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான தவறான தகவல்களை பரப்புவதாக அந்த பத்திரிகையின் விமர்சகர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |