ஜேர்மனிக்கு வழங்கும் எரிவாயுவின் அளவை மீண்டும் குறைத்தது ரஷ்ய நிறுவனம்: ஜேர்மனி கடும் விமர்சனம்
ஏற்கனவே செவ்வாயன்று ஜேர்மனிக்கு வழங்கும் எரிவாயுவின் அளவைக் குறைத்த ரஷ்ய எரிவாயு வழங்கல் நிறுவனம், இன்று மீண்டும் ஒரு முறை எரிவாயுவின் அளவைக் குறைத்துள்ளது.
ரஷ்ய எரிவாயு நிறுவனமான Gazprom நிறுவனம், Nord Stream 1 pipeline என்ற திட்டம் வாயிலாக, குழாய் மூலம் ஜேர்மனிக்கு எரிவாயு வழங்கி வந்தது.
ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதைத் தொடர்ந்து, ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் Nord Stream 2 pipeline திட்டம் என்னும் திட்டத்தை கிடப்பில் போட்டது ஜேர்மனி.
அப்போதே ரஷ்யா ஜேர்மனியைப் பழிவாங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ரஷ்யா மீதான தடைகளும் சேர்ந்துகொள்ள, எதிர்பார்த்ததுபோலவே கொஞ்சம் கொஞ்சமாக ஜேர்மனிக்கு வழங்கும் எரிவாயுவின் அளவை Gazprom நிறுவனம் குறைத்து வருகிறது.
இயந்திரம் ஒன்றில் ஏற்பட்டுள்ள பழுதுதான் எரிவாயு வழங்கலைக் குறைப்பதற்கான காரணம் என Gazprom நிறுவனம் கூறியிருந்தாலும், இது அரசியல் உள் நோக்கம் கொண்ட ஒரு நடவடிக்கை என ஜேர்மன் பொருளாதாரத் துறை அமைச்சரும், துணை சேன்ஸலருமான Robert Habeck விமர்சித்துள்ளார்.
விலையை உயர்த்துவதற்கான ஒரு திட்டம் இது என்று கூறியுள்ள அவர், விலை உயர்ந்தாலும் தேவையான அளவு எரிவாயுவை சந்தையிலிருந்து நம்மால் வாங்க முடியும் என்று கூறியுள்ளார்.
இப்போது ஜேர்மனியில் எரிவாயு தட்டுப்பாடு எதுவும் இல்லை என்று கூறியுள்ள Robert Habeck, இருந்தாலும், தற்போதைய சூழலில் எரிவாயுவை சேமிப்பது நல்லது என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Gazprom has reduced maximum gas supply volumes to Germany through the Nord Stream Baltic Sea pipeline by 40 percent.
— DW Politics (@dw_politics) June 15, 2022
Germany’s Economy Minister Robert Habeck says he has the impression that what happened is a political decision. pic.twitter.com/iofVT3qVZJ