பிரித்தானியாவிற்குள் நுழைந்த ரஷ்ய போர்க்கப்பல்கள்.. ஊடகங்களில் வெளியான பரபரப்பு செய்தி! உண்மையை உடைத்த தூதர்
ரஷ்ய கப்பல்கள் பிரித்தானியா கடல் பகுதியில் நுழைந்ததாக பிரிட்டிஷ் ஊடகங்களில் வெளியான செய்தி குறித்து பிரித்தானியாவுக்கான ரஷ்ய தூதர் உண்மையை உடைத்துள்ளார்.
சமீபத்தில் ரஷ்யா கடல் எல்லைக்குள் நுழைந்த பிரித்தானியா போர்க்கப்பல் மீது ரஷ்ய போர்க்கப்பல் மற்றும் போர் விமானம் எச்சரிக்கும் விதமாக தாக்குதல் நடத்தி விரயடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இச்சம்பவத்தை தொடர்ந்து இரு நாடுகளிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, பிரித்தானியா கடல் எல்லைக்குள் ரஷ்ய போர்க்கப்பல்கள் அத்துமீறி நுழைந்ததாக பிரிட்டிஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இந்நிலைியல் பிரிட்டிஷ் ஊடகங்களில் வெளியான செய்திகள் அந்நாட்டு அரசால் ஆதரிக்கப்படும் தவறான தகவல்களின் ஒரு பகுதியாகும் என்று பிரித்தானியாவுக்கான ரஷ்ய தூதர் ஆண்ட்ரி கெலின் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய கடற்படை மற்றும் விமானப்படை பால்டிக் மற்றும் வட கடல் உட்பட பல்வேறு பிராந்தியங்களில் பயிற்சிகளை நடத்துகின்றன, ஆனால் கண்டிப்பாக சர்வதேச கடல் மற்றும் வான்வெளியில் தான்.
ஒரு ரஷ்ய கப்பல் அல்லது விமானம் பிரித்தானியா கடல் அல்லது வான்வெளியை மீற எந்தவொரு சந்தர்ப்பமும் இல்லை என்று தூதர் கூறினார்.