அரசியலிலிருந்து விலகிவிடுங்கள்... ஜேர்மன் தலைவரை வம்புக்கிழுக்கும் ரஷ்ய முன்னாள் ஜனாதிபதி
உங்களுக்கு மரியாதையே இல்லை, பேசாமல் ஓய்வு பெற்றுவிடுங்கள் என்று கூறி, ஜேர்மன் சேன்ஸலரையும், பிரான்ஸ் ஜனாதிபதியையும் வம்புக்கிழுத்துள்ளார் ரஷ்ய முன்னாள் ஜனாதிபதி ஒருவர்.
உங்களுக்கு மரியாதையே இல்லை
ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதியும், புடின் ஆதரவாளருமான Dmitry Medvedev என்பவர், ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸையும், பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரானையும் வம்புக்கிழுத்துள்ளார். ஜேர்மனியும் பிரான்சும், ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளதை வைத்துத்தான் அவர்களை கேலி செய்துள்ளார் Dmitry Medvedev.
உங்களுக்கு மரியாதையே இல்லை, அதனால் பேசாமல் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுவிடுங்கள் என்று கூறும் Dmitry Medvedev, ஜேர்மனியும் பிரான்சும், தங்கள் நாட்டு மக்கள் நலனில் அக்கறை காட்டுவதை விட்டுவிட்டு, உக்ரைனுக்கு உதவிவருவதே, அவர்கள் ஐரோப்பிய தேர்தலில் பின்னடைவைச் சந்திக்கக் காரணம் என்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |