உடனடியாக உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தலாம்! பிரித்தானியா தகவல்
உக்ரைன் மீது ரஷ்யா உடனடியாக படையெடுக்க அதிக வாய்ப்புள்ளது என பிரித்தானியா வெளியுறவுத்துறை செயலாளர் லிஸ் டிரஸ் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா வெளியுறவுத்துறை செயலாளர் லிஸ் டிரஸ் கூறியதாவது, உக்ரைன் மீது ரஷ்யா உடனடியாக படையெடுக்க அதிக வாய்ப்புள்ளது மற்றும் ரஷ்ய துருப்புக்கள் மிக மிக விரைவாக உக்ரைன் தலைநகர் Kyivவை அடைய முடியும்.
இது ஐரோப்பிய பரந்த ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கும், இது உலகெங்கிலும் உள்ள ஆக்கிரமிப்பாளர்களை ஊக்குவிக்கும்.
ஆக்கிரமித்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை நாம் புடினுக்கு தெளிப்படுத்த வேண்டும்.
தாக்குதல் நடத்தப்பட்டதாக சித்தரிப்பு வீடியோக்களை வெளியிட்டு, அதை காரணமாக வைத்து ரஷ்யா மோதலை தூண்டக்ககூடும் என லிஸ் டிரஸ் எச்சரித்துள்ளார்.
அப்படி பார்க்கும் போது, உக்ரைன் மீது ரஷ்யா உடனடியாக படையெடுக்க அதிக வாய்ப்புள்ளது என டிரஸ் தெரிவித்துள்ளார்.