ரிஷியின் தோல்வியைக் கொண்டாடும் ரஷ்ய ஊடகங்கள்
பிரித்தானிய தேர்தலில் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் சார்ந்த கன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வி அடைந்ததை, ரஷ்ய ஊடகங்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றன.
ரிஷியின் தோல்வியைக் கொண்டாடும் ரஷ்ய ஊடகங்கள்
பிரித்தானிய தேர்தலில், கன்சர்வேட்டிவ் கட்சி தோல்வியடைந்துள்ளதைக் குறித்து ரஷ்ய ஊடகங்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளன.
ரஷ்ய அரசு தொலைக்காட்சி ஊடகவியலாளரான Vladimir Kornilov என்பவர், கன்சர்வேட்டிவ் கட்சியினரின் உக்ரைன் ஆதரவை, ரஷ்ய வெறுப்பு மற்றும் ரஷ்ய எதிர்ப்பு என விமர்சித்துள்ளார்.
குறிப்பாக, பிரித்தானியாவின் பாதுகாப்புச் செயலாக இருந்த கிராண்ட் ஷாப்ஸின் தோல்வி குறித்து பெருமகிழ்ச்சி தெரிவித்த விளாடிமிர், தேர்தலில் தங்கள் கட்சி தோற்றதைக் கேள்விப்பட்டு, ரஷ்ய எதிர்ப்பு பிரச்சாரகரான ஷாப்ஸ் கண்ணீர் விட்டுக் கதறியதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், இனி ஷாப்ஸுக்கு உக்ரைன் குறித்து எண்ண அதிக நேரம் கிடைக்கும் என்றும் கேலியாக குறிப்பிட்டுள்ளார் விளாடிமிர்.
பிரித்தானியாவின் கன்சர்வேட்டிவ் கட்சி உக்ரைனுக்கு ஆதரவு அளித்து வந்ததால், அக்கட்சி தோற்றதற்கு ரஷ்ய ஊடகங்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளன.
ஆனால், தற்போது வென்றுள்ள லேபர் கட்சியும் உக்ரைன் விடயத்தில் கன்சர்வேட்டிவ் கட்சியின் அதே கொள்கைகளையே கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |