புடினை வீழ்த்த பிரித்தானிய உளவுத்துறைக்கு உதவ முன்வந்துள்ள ரஷ்யர்கள்: உளவுத்துறை தலைவர் பரபரப்பு தகவல்
போரால் வெறுப்படைந்துள்ள ரஷ்யர்கள் பிரித்தானியாவுக்கு உதவ முன்வந்துள்ளதாக பிரித்தானிய உளவுத்துறைத் தலைவர் தெரிவித்துள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவுக்காக உளவு பார்க்க முன்வந்துள்ள ரஷ்யர்கள்
உக்ரைன் நகரங்களை நாசம் செய்து, அப்பாவி உக்ரைனியர்களின் வீடுகளுக்குள் நுழைந்து அவர்களை வீட்டை விட்டு வெளியேற்றி, ஆயிரக்கணக்கான பிள்ளைகளை கடத்தும் அராஜக செயல்களில் ஈடுபட்டுவரும் ரஷ்யப் படையினரைக் கண்டு ரஷ்யர்கள் பலர் வெறுப்படைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார் பிரித்தானிய உளவுத்துறைத் தலைவரான Sir Richard Moore.
Credit: Getty
ரஷ்யப்படையினரின் கொடுஞ்செயல்களால் மனசாட்சி உறுத்த, இந்த ரஷ்யர்கள் பிரித்தானியாவுக்காக ரஷ்யாவை உளவு பார்க்க முன்வந்துள்ளதாக தெரிவித்துள்ளார் அவர்.
அப்படி வருபவர்களை வரவேற்பதாக தெரிவித்துள்ள Sir Richard Moore, அவர்களுடைய இரகசியங்கள் பாதுகாக்கப்படும் என்றும், ரஷ்யர்களும் பிரித்தானியர்களும் இணைந்து போரை முடிவுக்குக் கொண்டு வர பாடுபடுவோம் என்றும் கூறியுள்ளார்.
Credit: AP
Sir Richard Moore பொதுவாக இப்படி வெளியில் வந்து பேசுவதில்லை. அவர் உளவுத்துறைத் தலைவராக பொறுப்பேற்றபின் இப்படி வெளிப்படையாக பேசுவது இது இரண்டாவது முறைதான் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |