ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதல் நிறுத்தப்படுமா? டிரம்ப் கருத்துக்கு இந்தியா பதிலடி
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்வதை நிறுத்துவதாக இந்தியா உறுதியளித்து இருப்பதாக டிரம்ப் தெரிவித்த கருத்துக்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்திய கச்சா எண்ணெய் கொள்முதல் குறித்து டிரம்ப் கருத்து
உக்ரைன் - ரஷ்யா போரை குறிப்பிட்டு ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றச்சாட்டு தெரிவித்து வருவதுடன் இந்தியா உடனான இறக்குமதி வரியையும் டிரம்ப் அதிகரித்தார். இது சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், இரு தரப்பு உறவிலும் கசப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சமீபத்தில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை படிப்படியாக நிறுத்தி கொள்வதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் உறுதியளித்து இருப்பதாக டிரம்ப் தெரிவித்திருந்தார்.
மேலும் மோடியால் இதனை உடனடியாக இதனை செய்ய முடியாது, ஆனால் இது விரைவில் முடிந்துவிடும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
இந்தியா திட்டவட்ட மறுப்பு
இந்நிலையில் டிரம்பின் கருத்துக்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது, அத்தோடு உலகளாவிய நிலையற்ற எரிசக்தி சூழ்நிலையில் இந்திய நுகர்வோர்களின் பலன்களை பாதுகாப்பதே தங்களது முதன்மை உரிமை என்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவின் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதிக்கான கொள்கைகள் இந்திய நுகர்வோர்களின் நிலையான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வழியில் இருப்பதாக தெரிவித்தார்.
அத்துடன் இந்தியாவின் 2 இலக்குகள் என்பது நிலையான எரிசக்தி விலைகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட விநியோகங்களை உறுதி செய்தல் என தெரிவித்துள்ளார்.
மேலும் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப அவை பல வழிகளில் பரந்த அளவில் பல்வகைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |