ரஷ்ய எண்ணெய்... இந்தியாவிற்கு சந்தை விலையை விட 5 டொலர் அதிகமாக விற்க முடிவு
ஈரான் போர் நெருக்கடியை அடுத்து ரஷ்யாவின் எண்ணெய் மீதான தடைகளை அமெரிக்கா 30 நாட்களுக்கு விலக்கி, மாஸ்கோவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கும் அனுமதி அளித்தது.
33 மில்லியன் பீப்பாய்
ரஷ்யாவில் இருந்து இந்தியா எவ்வளவு கச்சா எண்ணெய் வாங்கும், சலுகைகள் இனி இல்லை என ரஷ்யா அறிவித்த நிலையில், என்ன விலையில் விற்கப்படும் என்பது உள்ளிட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெளியான தகவல்களின் அடிப்படையில், இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷ்ய எண்ணெய் கொள்முதலை அதிகரித்துள்ளன, மேலும் மார்ச் மாதத்தில் சுமார் 33 மில்லியன் பீப்பாய்களை வாங்க வாய்ப்புள்ளது எனவும் தெரிய வந்துள்ளது.
மேலும், Indian Oil Corporation (OIC), Bharat Petroleum Corporation Ltd (BPCL), Hindustan Petroleum Corporation Limited (HPCL), and Mangalore Refinery மற்றும் Petrochemicals Ltd (MRPL) ஆகிய நிறுவனங்கள் ஏற்கனவே வர்த்தகர்களுடன் பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளனர்.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனமும் இந்த 30 நாட்கள் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளது. இதுவரை 20 மில்லியன் பீப்பாய் ரஷ்ய எண்ணெய் இந்திய நிறுவனங்களால் வாங்கப்பட்டுள்ளது.
ஆனால், ட்ரம்பின் உத்தரவை அடுத்து, ரஷ்யாவில் இருந்து தற்போது புதிதாக வாங்கப்படும் எண்ணெய் விலை என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ட்ரம்பின் அழுத்தத்தை அடுத்து இந்திய நிறுவனங்கள் அனைத்தும் ரஷ்ய எண்ணெய் வாங்குவதை மொத்தமாக கைவிட்டிருந்தது. இதனால் இனி ரஷ்யாவிடம் இருந்து எந்த சலுகையும் எதிர்பார்க்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.
இந்த நிலையில், பிரெண்ட் கச்சா எண்ணெய் சந்தை விலையில் இருந்து 4 முதல் 5 டொலர் அதிகமாக ரஷ்யா வசூலிக்கும் என்றே தரிய வந்துள்ளது. சிலர் 4 டொலர் வரையில் ஒப்பந்தம் முன்னெடுத்துள்ளனர்.
93 டொலர் வரையில்
பிரெண்ட் கச்சா எண்ணெய் தற்போது 88 டொலருக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் 93 டொலர் வரையில் இந்தியாவிடம் இருந்து ரஷ்யா வசூலிக்கும் என்றே தெரிய வந்துள்ளது.
மட்டுமின்றி, போர் சூழல் நீடிப்பதால் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை அதிகமானால், ரஷ்யா எண்ணெய் விலையும் அதிகரிக்கும். இந்திய எண்ணெய் இறக்குமதியில் கிட்டத்தட்ட 40 சதவீதம் அளவுக்கு ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால் பாதிப்பு ஏற்பட்டது.

பெரும்பாலான ரஷ்ய எண்ணெய் பாரசீக வளைகுடா மற்றும் ஹார்முஸ் நீரிணை வழியாகப் பாய்ந்தாலும், மாஸ்கோ யூரல்களில் இருந்து உருவாகும் கச்சா எண்ணெயை வேறு வழிகள் ஊடாக அனுப்ப முடியும்.
ரஷ்ய கச்சா எண்ணெய்யுடன் Suezmax என்ற கப்பல் மார்ச் முதல் வாரத்தில் இந்திய துறைமுகத்திற்கு வந்துள்ளது. குறித்த கப்பலானது எண்ணெய் நிரப்பப்பட்டு, வாங்க எவரும் முன்வராத நிலையில், இந்திய கடற்பகுதியில் பல வாரங்களாக காணப்பட்டுள்ளது. மட்டுமின்றி, 700,000 பீப்பாய் கச்சா எண்ணெய் நிரப்பிய Spring Fortune என்ற கப்பலும் தற்போது இந்தியாவிற்கு வர உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |