ரஷ்ய பெரும் முதலாளிகளை குறிவைக்க உருவாக்கப்பட்ட பணிக்குழு ட்ரம்ப் நிர்வாகத்தால் கலைப்பு
ரஷ்ய ஜனாதிபதிக்கு நெருக்கமான பெரும் முதலாளிகளை குறிவைக்கும் வகையில், உக்ரைன் போரை அடுத்து உருவாக்கப்பட்ட பணிக்குழுவை ட்ரம்ப் நிர்வாகம் கலைத்துள்ளது.
பணிக்குழு கலைக்கப்படுவதாக
உக்ரைன் போரையடுத்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு நெருக்கமான பெரும் முதலாளிகளை கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவே இந்த பணிக்குழு உருவாக்கப்பட்டது.
தற்போது ட்ரம்ப் நிர்வாகத்தில் அட்டர்னி ஜெனரலாக பொறுப்பேற்றுள்ள Pam Bondi புதன்கிழமை பல்வேறு உத்தரவுகளை வெளியிட்டுள்ளார். அதில் KleptoCapture என்ற பணிக்குழு கலைக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்ய பெரும் முதலாளிகளை குறிவைக்க பயன்படுத்தப்பட்ட குழுவினர் இனிமுதல் கார்டெல்களுக்கு எதிராக திருப்பி விடப்படும் என்றார்.
ஜோ பைடன் ஆட்சியின் போது உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு பொருளாதார உதவிகள் மேற்கொள்ளும் பெரும் முதலாளிகளை குறிவைத்து, அவர்களின் சொத்துக்களை முடக்க பணிக்குழு ஒன்று உருவாக்கப்பட்டது.
ரஷ்யாவுடன் நெருக்கம்
இவர்கள் முன்னெடுத்த நடவடிக்கையால், ரஷ்யாவின் பெரும் முதலாளிகளான Oleg Deripaska, Konstantin Malofeyev, Suleiman Kerimov மற்றும் Viktor Vekselberg ஆகியோர்கள் சிக்கினர்.
தற்போது பணிக்குழுவால் விசாரிக்கப்படும் வழக்குகள் தொடர வாய்ப்புள்ளது, ஆனால் பணிகள் இனி நீதித்துறை தலைமையகத்தால் முன்னெடுக்கப்படாது என்றே கூறப்படுகிறது.
ரஷ்யாவுடன் ஒரு நெருக்கமான உறவை முன்னெடுக்கவே தாம் விரும்புவதாக ட்ரம்ப் ஏற்கனவே தெரிவித்துள்ளார். மட்டுமின்றி, ஆட்சிக்கு வந்ததும் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவேன் என்றும் தெரிவித்திருந்தார்.
தற்போது ஆட்சிக்கு வந்து முதல் 100 நாட்களில் உக்ரைன் போர் முடிவுக்கு கொண்டுவரப்படும் என அறிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |