பிரித்தானிய கடற்பரப்பிற்குள் நுழைந்த ரஷ்ய உளவு கப்பல்: நிலைநிறுத்தப்படும் பிரிட்டிஷ் படைகள்
ஸ்காட்லாந்துக்கு அருகே ரஷ்ய உளவு கப்பலானது கண்காணிக்கப்பட்டு இருப்பதாக பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய கடற்பரப்பிற்குள் ரஷ்ய உளவு கப்பல்
பிரித்தானிய கடற்பரப்பு எல்லைக்கு அருகே ரஷ்யாவின் உளவு சேகரிப்பு கப்பல்(yantar) இயங்கி வருவதாக பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் ஜான் ஹீலி தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் உளவு கப்பல் இந்த ஆண்டு இரண்டாவது முறையாக பிரித்தானிய கடற்பரப்பு பிராந்தியற்கு அருகே அனுப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

டவுனிங் தெருவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஜான் ஹீலி, ரஷ்ய உளவு கப்பலின் இருப்பை உறுதிப்படுத்தினார்.
அத்துடன் ரஷ்யாவின் உளவு கப்பலான யாண்டார் பிரித்தானிய கடற்பரப்பிற்கு அருகே நுழைந்ததை தொடர்ந்து ஸ்காட்லாந்தின் வடக்கே பிரித்தானிய கடற்படை நிலைநிறுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
யாண்டார் கப்பல் உளவுத் தகவல்களை சேகரிப்பதற்கும், நீருக்கடியில் உள்ள கேபிள்களை படமெடுப்பதற்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது என ஹீலி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் யாண்டார் கப்பலின் மீதான கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி இருப்பதாகவும் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
கடலுக்கு அடியில் அமைந்துள்ள இந்த கேபிள்கள் தொலைத்தொடர்பு மற்றும் நாட்டின் உள்கட்டமைப்புகளுக்கு முக்கியமானது என்பதால் ரஷ்ய உளவு கப்பலின் செயல்பாடுகள் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக கருதப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |