ஜாம்பவான் ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற ரஷ்ய வீரர்!
டென்னிஸில் ஜாம்பவானான ஜோகோவிச்சை வீழ்த்தி ரஷ்ய வீரர் ஆண்ட்ரே ரூப்லேவ் சாம்பியன் பட்டம் வென்றார்.
செர்பியா ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில், 24 வயதான ரஷ்ய வீரர் ஆண்ட்ரே ரூப்லெவ் டென்னிஸில் ஜாம்பவான் வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச்சை எதிர்கொண்டார்.
முதல் சுற்றை 6-2 என ஆண்ட்ரே எளிதில் வென்ற நிலையில், இரண்டாவது சுற்றை 7-6 என்ற கணக்கில் ஜோகோவிச் கைப்பற்றினார். அதன் பின்னர் மூன்றாவது சுற்றில் ஆதிக்கம் செலுத்திய ஆண்ட்ரே ரூப்லெவ், சிறப்பாக ஆடி 6-0 என்ற கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
உலகின் no.1 வீரரான ஜோகோவிச்சை, 8வது தரவரிசையில் இருக்கும் 24 வயதேயான ரூப்லெவ் வீழ்த்தியுள்ளார். இந்த போட்டி மொத்தம் 2 மணிநேரம் 29 நிமிடங்கள் நடைபெற்றது.