உக்ரைன் போருக்கு எதிராக ரஷ்ய வீராங்கனையின் முதல் குரல்! தோழியை காதலிப்பதாக வெளிப்படையாக கூறியதால் வைரலாகும் புகைப்படம்
ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை டாரியா, தனது தோழி நடாலியாவை காதலிப்பதாக கூறி வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
ரஷ்யாவில் ஒரே பாலினத்தவர்கள் காதலிப்பதற்கு 2013ஆம் ஆண்டு முதல் கடுமையான தடை சட்டங்கள் உள்ளன. ஆனால், உலகின் பல நாடுகளில் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்துகொள்ள சட்டப்பூர்வமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பிரபல ரஷ்ய டென்னிஸ் வீராங்கனையான டாரியா கசட்கினா தனது தோழி நடாலியா ஸபியாகோவை காதலிப்பதாக வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசும்போது, உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் போரை கண்டித்தார். இந்த சண்டை முடிவுக்கு வர வேண்டும் எனவும் கூறினார்.
sportskeeda
தனது காதல் குறித்து டாரியா கூறுகையில், 'ஓரினச் சேர்க்கையாளர் என்பதை யாரும் தீவிரயமாக தேர்வு செய்ய விரும்பமாட்டார்கள். அது உங்கள் வாழ்க்கையை ஏன் கடினமாக்குகிறது, குறிப்பாக ரஷ்யாவில்? என்ன காரணம்? ரஷ்யாவில் என்னால் ஒருபோதும் ஸபியாகோவின் கரத்தை பற்ற முடியாது. ஆனால், இனி ஒருபோதும் பொய்யாக என்னால் வாழ முடியாது.
ஒரு குறுகிய வட்டத்திற்குள் வாழ்வது மிகவும் கடினம். அது அர்த்தமற்றது. மற்றவர்களை பற்றி கவலைப்படாமல் நிம்மதியாக வாழ்வது மட்டுமே முக்கியம். விளையாட்டு அல்லது வேறு எந்தத் துறையிலும் செல்வாக்கு மிக்கவர்கள் உண்மையில் அதைப் பற்றி பேசுவது முக்கியம் என்று நான் நம்புகிறேன்.
givemesport
சமூகத்துடன் கடினமாக இருக்கும் இளைஞர்களுக்கு இது முக்கியமானது மற்றும் அவர்களுக்கு ஆதரவு தேவைப்படும்' என தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான போருக்கு எதிராக குரல் கொடுத்த முதல் ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை என்ற பெருமையை டாரியா பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.