ஐ.எஸ் பயன்படுத்தும் ரசாயனம்... பாரிஸ் ஹொட்டலில் அசம்பாவிதம்: சிக்கிய ரஷ்ய- உக்ரைன் நபர்
பாரிஸ் விமான நிலையம் அருகே ஹொட்டல் அறை ஒன்றில் ஐ.எஸ் பயன்படுத்தும் ரசாயனங்களால் உருவாக்கிய வெடிகுண்டை வெடிக்கவைத்த தீவிரவாதி ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
ஐ.எஸ் தீவிரவாதிகள்
பெயர் வெளியிடப்படாத அந்த நபர் ரஷ்ய- உக்ரேனியர் என்றும், தற்போது பொலிஸ் காவலில் உள்ளார் என்றும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அவரது முகம் மற்றும் கைகள் மோசமாக காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
நவம்பர் 2015ல் பாரிஸ் தாக்குதலின் போது ஐ.எஸ் தற்கொலை குண்டுதாரிகளால் பயன்படுத்தப்பட்ட இரசாயனங்களை தற்போது பொலிசாரிடம் சிக்கியுள்ள 26 வயதேயான அந்த இளைஞர் பயன்படுத்தியுள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொடர்புடைய தாக்குதலில் 130 பேர்கள் கொல்லப்பட்டிருந்தனர். மட்டுமின்றி, 2017ல் மான்செஸ்டர் அரங்கத்தின் மீதான தாக்குதலின் போதும் ஐ.எஸ் தீவிரவாதிகள் இதே ரசாயனத்தை பயன்படுத்தியுள்ளனர். இதில் 22 பேர்கள் கொல்லப்பட்டனர்.
பாரிஸ் நகரில் 80வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சிகளில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரித்தானிய மன்னர் சார்லஸ், உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ஆகியோர் கலந்துகொள்ளும் நிலையிலேயே ஹொட்டல் அறையில் வெடிகுண்டு வெடித்துள்ளது.
ஐரோப்பா முழுவதும் தாக்குதல்
மோசமாக காயமடைந்திருந்தாலும், அந்த நபரிடம் அதிகாரிகள் விசாரணை முன்னெடுத்துள்ளதாகவே கூறப்படுகிறது. மட்டுமின்றி, தமது திட்டம் குறித்தும் அதிகாரிகளிடம் அந்த நபர் விளக்கியதாக கூறப்படுகிறது.
Charles de Gaulle விமான நிலையத்திற்கு மிக அருகே அமைந்துள்ள அந்த ஹொட்டலை பிரித்தானிய பயணிகள் அதிகமாக பயன்படுத்துவார்கள். இந்த நிலையில் உடனடியாக அவர்கள் அந்த ஹொட்டலில் இருந்து வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், சம்பவத்திற்கு பின்னர் புதன்கிழமை முழுவதும் அந்த ஹொட்டல் மூடப்பட்டிருந்தது. மிக சமீபத்தில் தான் அந்த நபர் பிரான்சுக்கு வந்து, சொந்த பெயரிலேயே ஹொட்டலில் அறை பதிவு செய்துள்ளார்.
முன்னதாக ரஷ்ய ஆதரவு நபர்களால் ஐரோப்பா முழுவதும் தாக்குதல் சம்பவங்கள் திட்டமிடப்பட்டு வருவதாக போலந்து பிரதமர் Donald Tusk எச்சரிக்கை விடுத்து வந்த நிலையிலேயே ரஷ்ய- உக்ரேனிய இளைஞர் வெடிகுண்டு மற்றும், பல்வேறு நாட்டின் கடவுச்சீட்டுகளுடன் கைதாகியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |