நான் இந்தியராகிவிட்டேன் - ரஷ்ய பெண்மணி வெளியிட்ட நெகிழ்ச்சியான காணொளி
ரஷ்ய பெண்ணொருவர் தான் இந்திய குடியுரிமை பெற்ற மகிழ்ச்சியை இணையத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.
ரஷ்யாவைச் சேர்ந்த மரினா கர்பானி (Marina Kharbani), தனது திருமணத்தைத் தொடர்ந்து இந்தியாவில் குடியேறி வாழ்ந்து வருகிறார்.
அவர் தற்போது தனது வாழ்நாளில் ஒரு முக்கிய முன்னேற்றத்தை அடைந்துள்ளார். Overseas Citizenship of India (OCI) அட்டையை பெற்றதற்கான அவரது மகிழ்ச்சியான வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில், மரினா தனது குழந்தையை ஒரு கையிலும், OCI அட்டையை மறுமைக் கையிலும் பிடித்தபடி, “நான் இந்தியராகிவிட்டேன்... கிட்டத்தட்ட!” என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
"மூன்று ஆண்டுக்கும் மேலான முயற்சி இதற்கு பின்னாடி இருக்கிறது," எனவும் அவர் கூறுயுள்ளார்.
இந்த வீடியோவில் அவர் கடைசியாக கூறிய “அடுத்தது என் குழந்தைக்கு” என்ற வார்த்தைகள் நெகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பையும் கூட்டுகின்றன.
இந்த வீடியோக்கு இதுவரை 2 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இருந்துள்ளனர். கமெண்ட் பகுதி முழுக்க வாழ்த்துகள் மற்றும் ஆதரவு பதிவுகளால் நிரம்பியுள்ளது.
“இவ்வளவு மகிழ்ச்சியாக இந்திய அடையாளத்தை ஏற்றுக் கொள்பவரை இதுவரை பார்த்ததில்லை,” என ஒருவர் கூறியிருந்தார்.
OCI என்பது முழுமையான இந்திய குடியுரிமை அல்ல. ஆனால் இந்திய வம்சாவளியுடைய வெளிநாட்டு நபர்களுக்கு விசா தேவையின்றி இந்தியாவில் வாழ, வேலை செய்ய, பயணம் செய்ய அனுமதிக்கும் ஒரு முக்கியமான அடையாளமாகும்.
மரினாவின் வாழ்க்கை மற்றும் இந்திய கலாச்சாரத்தில் அவர் கொண்டுள்ள பாசம், பலரது இதயத்தையும் தொட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Russian woman gets OCI card, Marina Kharbani India citizenship, Shillong Russian Indian marriage, OCI success story 2025, Overseas Citizenship of India viral video, Indian culture adoption, Foreigner becomes Indian, Viral Instagram video India OCI, Viral OCI video 2025, Russian woman in India viral video, Indian citizenship emotional video