15 பந்துகளில் 6 சிக்ஸர்களுடன் 47 ரன்! 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சம்பவம் செய்த வீரர்
SA20 போட்டியில் பிரிட்டோரியா கேபிட்டல்ஸ் அணி 85 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பை கேப் டவுன் அணியை வீழ்த்தியது.
ரூதர்போர்ட் ருத்ர தாண்டவம்
நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நடந்த SA20 போட்டியில் மும்பை கேப் டவுன் அணி பிரிட்டோரியா கேபிட்டல்ஸ் அணியை எதிர்கொண்டது.

முதலில் களமிறங்கிய பிரிட்டோரியா அணி 220 ஓட்டங்கள் குவித்தது. ஷாய் ஹோப் 45 (30) ஓட்டங்களும், லுபிபே 60 (36) ஓட்டங்களும் விளாசினர்.
ருத்ர தாண்டவம் ஆடிய ரூதர்போர்ட் 15 பந்துகளில் 47 ஓட்டங்கள் (6 சிக்ஸர்கள்) குவித்தார். பிரேவிஸ் 36 (13) ஓட்டங்கள் எடுத்தார்.

பின்னர் ஆடிய மும்பை அணி 14.2 ஓவர்களில் 135 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகட்சமாக ரிக்கெல்டன் 33 (17) ஓட்டங்கள் எடுத்தார்.
மிரட்டலாக பந்துவீசிய ரூதர்போர்ட் 4 விக்கெட்டுகளும், கேஷவ் மஹராஜ் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |