ஒரே ஓவரில் 7 சிக்ஸர்! வாணவேடிக்கை காட்டி 220 ஓட்டங்கள்.. புதிய உலக சாதனை படைத்த வீரரின் வீடியோ
இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட் ஆறு பந்துகளில் ஏழு சிக்ஸர்கள் விளாசி புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
புதிய உலக சாதனை
விஜய் ஹசாரே கோப்பையின் இன்றைய போட்டியில் உத்தர பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா அணிகள் விளையாடி வருகின்றன.
முதலில் ஆடிய மகாராஷ்டிரா அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 330 ஓட்டங்கள் குவித்தது.அந்த அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ருத்ர தாண்டவம் ஆடினார்.
165 ஓட்டங்கள் எடுத்திருந்த ருதுராஜ், 49வது ஓவரில் முதல் 5 பந்துகளையும் சிக்ஸர்களாக பறக்க விட்டார். ஆனால் ஐந்தாவது பந்து நோ பால் என அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மீண்டும் வீசப்பட்ட 5வது பந்தையும் சிக்ஸராக்கிய ருதுராஜ், கடைசி பந்தையும் சிக்ஸருக்கு விளாசினார்.
இதன்மூலம் ஒரே ஓவரில் ஏழு சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற பிரம்மாண்ட உலக சாதனையை அவர் படைத்தார்.
6 6 6 6 6nb 6 6 in an over from Ruturaj Gaikwad ?
— ESPNcricinfo (@ESPNcricinfo) November 28, 2022
(via @BCCIdomestic) pic.twitter.com/tlFZjj7hnA
இறுதிவரை களத்தில் நின்ற ருதுராஜ், 159 பந்துகளில் 220 ஓட்டங்கள் குவித்தார். இதில் 16 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகள் அடங்கும்.
சென்னை அணி வீரர்
இந்திய அணிக்காக 9 டி20 மற்றும் 1 ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ள ருதுராஜ் கெய்க்வாட், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
மொத்தம் 36 ஐபிஎல் போட்டியில் ருதுராஜ் 1207 ஓட்டங்கள் அடித்துள்ளார். இதில் ஒரு சதம், 10 அரைசதங்கள் அடங்கும்.
@bcci