இலங்கைக்கு எதிரான தொடரில் உதவும்! டோனி கற்று கொடுத்த வித்தை... இந்திய அணி வீரர் நம்பிக்கை
இந்திய அணியில் இளம் வீரர் ருத்துராஜ் கெய்க்வாட் தனது கிரிக்கெட் வாழ்வில் டோனியின் பங்கு குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
ருத்துராஜ் கெய்க்வாட் தேசிய அளவிலும், ஐபிஎல் களத்திலும் தனது சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார்.
அதன் மூலம் அவருக்கு இலங்கை தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது, ஐபிஎல்லில் சென்னை அணிக்காக விளையாடிய போது அவர் டோனியுடன் நெருக்கமாக பழகி பல கிரிக்கெட் விடயங்களை கற்று கொண்டிருக்கிறார்.
டோனி குறித்து பேசிய ருத்துராஜ், டோனி எனக்கு பெரிதும் உதவியுள்ளார். தொடக்கத்தில் ஐபிஎல் களத்தில் நான் ரன் சேர்க்க தவறியபோது என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு கொடுத்தார்.
அதனால் நான் உறுதியுடன் ஆட்டத்தை அணுகினேன். அதன் மூலம் ரன்களும் சேர்த்தேன். அவர் கொடுத்த ஆலோசனைகள் இலங்கைக்கு எதிரான தொடரில் உதவும் என நம்புகிறேன் என பேசியுள்ளார்.