சச்சினை எட்டிப்பிடித்த சென்னை அணி வீரர்! மிரட்டல் சாதனைகள்
இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் ஜாம்பவான் வீரர் சச்சினின் சாதனையை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ருதுராஜ் கெய்க்வாட் சமன் செய்துள்ளார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக நேற்று நடந்த ஐபிஎல் லீக் போட்டியில், சென்னை அணி வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 57 பந்துகளில் 99 ஓட்டங்கள் விளாசினார்.
இதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 1000 ஓட்டங்களை விரைவாக எடுத்த சச்சினின் சாதனையை சமன் செய்தார். சச்சின் மற்றும் ருதுராஜ் இருவரும் 31 போட்டிகளில் 1000 ஓட்டங்களை எட்டியுள்ளனர்.
மேலும் ஒரு சாதனையை ருதுராஜ் படைத்தார். அவர் கன்வேயுடன் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 182 ஓட்டங்கள் குவித்தார். இது தான் ஐபிஎல் வரலாற்றில் ஒரு தொடக்க ஜோடி குவித்த அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.