சிக்ஸர் மழை! 195 ஓட்டங்கள் விளாசிய சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்
ரஞ்சி கோப்பை போட்டியில் மகாராஷ்டிரா அணி வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 195 ஓட்டங்கள் விளாசினார்.
ரஞ்சி போட்டி
தமிழ்நாடு - மகாராஷ்டிரா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தமிழ்நாடு அணி மகாராஷ்டிராவை துடுப்பாட்டம் செய்ய பணித்தது.
அதன்படி களமிறங்கிய மகாராஷ்டிரா அணியில் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியில் மிரட்டினார். கேதார் ஜாதவ் 56 ஓட்டங்களும், ஆஸிம் கஸி 88 ஓட்டங்களும் விளாச, கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்த கெய்க்வாட் 195 ஓட்டங்கள் குவித்தார்.
@TANNU MANDAR
கெய்க்வாட் சிக்ஸர் மழை
சிக்ஸர்களை பறக்கவிட்டு வாணவேடிக்கை காட்டிய அவர் 184 பந்துகளில் இந்த ஸ்கோரை எட்டினார். இதில் 8 சிக்ஸர், 24 பவுண்டரிகள் அடங்கும். அவரது அபாரமான ஆட்டத்தினால் மகாராஷ்டிரா அணி 445 ஓட்டங்கள் குவித்தது.
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் கெய்க்வாட் 36 போட்டிகளில் 1207 ஓட்டங்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.