இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் இந்திய அணியில் முக்கிய மாற்றம்.. இளம் நட்சத்திரம் விலகல்!
இலங்கைக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இந்தியாவின் இளம் நட்சத்திர வீரர் ருதுராஜ் கெய்க்வாட் விலகியுள்ளார்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
டி20 தொடரை தொடர்ந்து இரு அணிகளும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கின்றன.
முதல் டி20 போட்டியில் இலங்கை அணி தோல்வியை தழுவிய நிலையில், இன்று தர்மசாலாவில் இரு அணிகளும் 2வது டி20 போட்டியில் மோதவிருக்கின்றன.
இன்றையை போட்டியில் வெற்றிப்பெற்றால் இந்திய அணி டி20 தொடரை கைப்பற்றிவிடும் என்பதால், இலங்கை அணிக்கு வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இருந்து பேட்ஸ்மேன் ருதுராஜ் கெய்க்வாட் விலகியுள்ளார்.
வியாழன் அன்று லக்னோவில் நடந்த முதல் டி20 போட்டிக்கு முன்னதாக அவரது வலது மணிக்கட்டு மூட்டில் வலி இருப்பதாக அவர் புகார் செய்தார், மேலும் பிசிசிஐ மருத்துவக் குழு அவரை பரிசோதித்தது.
நிபுணர் ஆலோசனையை தொடர்ந்து MRI ஸ்கேன் செய்யப்பட்டது. ருதுராஜ் இப்போது தனது காயத்திற்கு மேலும் சிகிச்சை பெறுவதற்காக பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்குச் செல்கிறார்.
மீதமுள்ள இரண்டு டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் மயங்க் அகர்வாலை இந்திய தேர்வுக் குழு சேர்த்துள்ளது.
மயங்க் தர்மசாலாவில் உள்ள இந்திய அணியில் இணைந்துள்ளார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
NEWS - Ruturaj Gaikwad ruled out of T20I series.
— BCCI (@BCCI) February 26, 2022
More details here - https://t.co/wHy55tYKfx @Paytm #INDvSL pic.twitter.com/9WM1Iox0ag
2வது மற்றும் 3வது டி20 போட்டிகளுக்கான இந்திய டி20 அணி:
- ரோகித் சர்மா (கேப்டன்)
- ஸ்ரேயாஸ் ஐயர்
- சஞ்சு சாம்சன்
- இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்)
- வெங்கடேஷ் ஐயர்
- தீபக் ஹூடா
- ரவீந்திர ஜடேஜா
- யுஸ்வேந்திர சாஹல்
- ரவி பிஷ்னோய்
- குல்தீப் யாதவ்
- சிராஜ்
- புவனேஷ்வர் குமார்
- ஹர்ஷல் படேல்
- ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்)
- அவேஷ் கான்
- மயங்க் அகர்வால்