IPL 2024யில் அணித்தலைவராக முதல் வெற்றி! CSK-வின் ருதுராஜ் கூறிய விடயம்
கேப்டன்சி பொறுப்பில் கூடுதல் அழுத்தத்தை உணரவில்லை என சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல் 2024 சீசனின் முதல் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தியது.
An Anbuden Classic ??#CSKvRCB #WhistlePodu pic.twitter.com/LQpiF4aLdW
— Chennai Super Kings (@ChennaiIPL) March 22, 2024
இது அணித்தலைவராக பொறுப்பேற்ற இளம்வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டின் முதல் வெற்றி ஆகும். போட்டி முடிந்த பின்னர் பேசிய ருதுராஜ் கூறுகையில்,
''முதல் 3 ஓவர்களை தவிர, எஞ்சிய ஓவர்கள் முழுமையாக கட்டுப்பாட்டில் இருந்தன. 10 முதல் 15 ஓட்டங்கள் குறைவாக இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். மேக்ஸ்வெல், டூ பிளெஸ்ஸிஸ் ஆகியோரின் விக்கெட்டுகள் ஆட்டத்தின் பாரிய திருப்புமுனை.
அணித்தலைமை பொறுப்பை நான் எப்போதும் ரசித்து மகிழ்ந்தேன். கூடுதலாக எந்த அழுத்தத்தையும் நான் உணரவில்லை. நிலைமையை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து எனக்கு அனுபவம் உள்ளது. எந்த அழுத்தத்தையும் நான் உணரவில்லை, தோனியும் என்னுடன் உள்ளார்'' என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |