இது உன்னுடைய அணி; நான் தலையிட மாட்டேன் - ருதுராஜிடம் தோனி சொன்ன விடயம்
CSKவின் அணித்தலைவராக நியமிக்கப்பட்டது குறித்த தகவல் ஒன்றை ருதுராஜ் பகிர்ந்துள்ளார்.
ருதுராஜ் கெயிக்வாட்
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் 18வது ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22 ஆம் திகதி தொடங்கி மே 25 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.
5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மார்ச் 23ஆம் திகதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் தனது முதல் போட்டியில் மும்பையை எதிர்கொள்கிறது.
முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸின் அணித்தலைவராக அந்த அணியை வழிநடத்திய தோனி, 2024 ஐபிஎல் தொடரில் அந்த பொறுப்பை ருதுராஜ் கெயிக்வாட்டிடம் வழங்கினார்.
அணித்தலைவர் பொறுப்பு கைமாற்றப்பட்டது குறித்த தகவல் ஒன்றை ருதுராஜ் கெயிக்வாட் தெரிவித்துள்ளார்.
நான் தலையிட மாட்டேன்
இது குறித்து பேசிய ருதுராஜ் கெயிக்வாட், "கடந்த 2024 ஐபிஎல் தொடருக்கு ஒரு வாரத்துக்கு முன் தோனி என்னிடம் வந்து, 'இந்த ஆண்டு அணியை நான் வழிநடந்த போவதில்லை. நீதான் கேப்டன்' என கூறினார்.
முதல் போட்டியில் இருந்தே நான்தான் வழிநடத்த வேண்டுமா? என நான் கேட்டதற்கு 'இது உன்னுடைய அணி, நீதான் சொந்த முடிவுகளை எடுக்க வேண்டும், இதில் நான் தலையிட மாட்டேன்.
ஃபீல்டிங்கில் 50% நீயும் 50% நானும் பார்த்து கொள்ளலாம். ஆனாலும், என் அறிவுரையை கேட்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை' என்றார். அந்த நம்பிக்கை மிகப்பெரியது" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |