CSKவின் தோல்விக்கு காரணம் இதுதான் - அணித்தலைவர் ருதுராஜ் சொல்வதென்ன?
18வது ஐபிஎல் தொடரில், நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 9 வது லீக் போட்டியில் CSK மற்றும் RCB அணிகள் மோதின.
CSK vs RCB
கடந்த 17 வருடங்களாக சேப்பாக்கம் மைதானத்தில் CSK மற்றும் RCB க்கு இடையேயான போட்டியில் CSK தான் வெற்றி பெற்று வந்தது.
இதனால், இந்த போட்டியில் வெற்றி பெறுவது யார் என பலத்த எதிர்பார்ப்பு நிலவியது.
நாணய சுழற்சியில் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் துடுப்பாட்டம் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 196 ஓட்டங்கள் குவித்ததது. அதிகபட்சமாக ரஜத் படிதர் 51 ஓட்டங்கள் குவித்தார்.
அதைத்தொடர்ந்து, 197 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.
17 வருடங்களுக்கு பிறகு RCB வெற்றி
தொடக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்திரா நிதானமாக நின்று குவித்தார். மறுபுறம், ராகுல் திரிபாதி(5), ருதுராஜ் கெய்குவாட்(0), தீபக் ஹுடா (4), சாம் கரன் (8), ஒற்றை இலக்க ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
இறுதியில், சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
17 வருடங்களுக்கு பிறகு, சேப்பாக்கம் மைதானத்தில் RCB உடன் தோல்வியடைந்ததால் CSK ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
ருதுராஜ் சொல்லும் காரணம்
போட்டிக்கு பிறகு இது குறித்து பேசிய அணித்தலைவர் ருதுராஜ் கெய்குவாட், "இந்த மைதானத்தில் 170 ஓட்டங்கள் எடுப்பதே சிறந்த ஸ்கோர். கூடுதலாக 20 ஓட்டங்களை எடுப்பது எளிதல்ல.
இந்த போட்டியில் ஃபீல்டிங் எங்களுக்கு மோசமாக அமைந்தது. அதுதான் தோல்விக்கு காரணம் என நினைக்கிறேன்.
மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்திக்காதது மகிழ்ச்சிதான். இன்றைய ஆட்டத்தில் ஆர்சிபி அணி பக்கமே காற்று அடித்து கொண்டிருந்தது" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |