பிரித்தானிய அரசின் ருவாண்டா திட்டத்திற்கு கடும் பின்னடைவு: சட்டவிரோதம் என நீதிபதிகள்
பிரித்தானியாவில் தஞ்சமடையும் புலம்பெயர் மக்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் திட்டம் மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் சட்டவிரோதமானது என தீர்ப்பளிக்கப்பட்டது.
ரிஷி சுனக்கின் வாக்குறுதி குழப்பத்தில்
இதனால், சிறு படகுகள் விவகாரத்தில் பிரதமர் ரிஷி சுனக்கின் வாக்குறுதி இன்று குழப்பத்தில் மூழ்கியதாக கூறுகின்றனர். இருப்பினும், ருவாண்டாவுக்கு புலம்பெயர் மக்களுடன் விமானம் புறப்படும் வரையில், தங்கள் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என அமைச்சர்கள் தரப்பு உறுதி அளித்துள்ளனர்.
@PA
ருவாண்டா உண்மையில் பாதுகாப்பான நாடல்ல என்றே மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பிரித்தானிய உள்விவகார அமைச்சகம் எதிர்கொண்ட கடும் பின்னடைவு என்றே கூறுகின்றனர்.
பிரித்தானியாவில் தஞ்சமடையும் புலம்பெயர் மக்களை ருவாண்டாவுக்கு நாடுகடத்தும் ரிஷி சுனக் அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து, இடதுசாரி சட்டத்தரணிகளும் சில தொண்டு நிறுவனங்களும் நீதிமன்றத்தை நாடினர்.
ஆனால், ருவாண்டாவுக்கான விமானம் கட்டாயம் புறப்படும் என்றே அமைச்சர்கள் தரப்பு தற்போதும் கூறி வருகின்றனர். தற்போது இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர்.
ஏமாற்றம் தரும் தீர்ப்பு
மேலும், நாட்டில் பாராளுமன்றத்தின் தெளிவான முடிவுக்கு எதிரான ஏமாற்றம் தரும் தீர்ப்பு என முன்னாள் அமைச்சர் சைமன் கிளார்க் தெரிவித்துள்ளார். மேலும், உச்ச நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக மேல்முறையீடு செய்யப்படும் என எதிர்பார்க்கிறேன்.
@PA
நமது எல்லைகளை நாம் பாதுகாக்க வேண்டியது நமது கடமை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, ருவாண்டா பாதுகாப்பற்ற நாடு என்ற பிரித்தானிய நீதிமன்றத்தின் முடிவை அங்குள்ள அரசாங்கம் கடுமையாக விமர்சித்துள்ளது.
மேலும், ருவாண்டா உலகின் பாதுகாப்பான நாடுகளில் ஒன்று. அகதிகளை நாங்கள் முன்னுதாரணமாக நடத்துவதற்காக UNHCR மற்றும் பிற சர்வதேச அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளோம் எனவும் ருவாண்டா அதிகாரிகள் தரப்பு குறிப்பிட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |