ருவாண்டா சித்திரவதை செய்து கொல்லும் நாடு... புகலிடக்கோரிக்கையாளர்கள் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் விவாதம்
பிரித்தானிய உள்துறைச் செயலர், பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து புகலிடம் கோருபவர்களின் புகலிடக்கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்வரை, அவர்களை ருவாண்டா என்னும் ஆப்பிரிக்க நாட்டுக்கு அனுப்ப திட்டமிட்டுவருகிறார்.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு
ருவாண்டா பாதுகாப்பான நாடல்ல என்று கூறி, இந்த பிரச்சினையை, சில புகலிடக்கோரிக்கையாளர்களுடன், தொண்டு நிறுவனங்களும் லண்டனிலுள்ள உயர் நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்றன. உயர் நீதிமன்றம் அவர்களைக் கைவிடவே, அவர்கள் மேல்முறையீட்டு நீதிமன்றத்தை நாடினர்.
மேல்முறையீட்டு நீதிமன்றம், புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு அனுப்புவது சட்டவிரோதம் என தீர்ப்பளித்தது. எப்படியாவது சட்டவிரோத புலம்பெயர்வோரை அச்சுறுத்தியாவது கட்டுப்படுத்தும் எண்ணத்திலிருந்த பிரித்தானிய உள்துறைச் செயலரான சுவெல்லா பிரேவர்மேனுக்கு இந்த தீர்ப்பு ஏமாற்றத்தை அளித்தது. ஆகவே, வழக்கை உச்ச நீதிமன்றம் கொண்டு சென்றுள்ளார் அவர்.
Kin Cheung/AP
உச்ச நீதிமன்றத்தில் வாதம்
இந்த வழக்கில், நேற்று முதல், மூன்று நாட்களுக்கு, ஐந்து நீதிபதிகள் முன் உச்ச நீதிமன்றத்தில் விவாதங்கள் நடத்துவது என முடிவாகி, விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன.
புகலிடக்கோரிக்கையாளர்கள் தரப்பில் ஆஜரான சட்டத்தரணியான Raza Husain, ருவாண்டா, தனக்கு எதிரானவர்கள் என கருதப்படுவோரை சித்திரவதை செய்து கொல்லும் நாடு, பிரித்தானிய உள்துறைச் செயலர் சொல்வது போல, அது பாதுகாப்பான நாடு அல்ல என்னும் வாதத்தை முன்வைத்துள்ளார்.
மூன்று நாட்கள் விவாதங்களைக் கேட்டபின் , உச்ச நீதிமன்றம் புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு அனுப்புவது தொடர்பில் தீர்ப்பளிக்க உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |