புகலிடக்கோரிக்கையாளர்களை நாடுகடத்தும் பிரித்தானிய அரசின் திட்டம்: விமர்சித்த ருவாண்டா நாட்டுப் பெண்ணுக்கு கொலை மிரட்டல்
புகலிடக்கோரிக்கையாளர்களை நாடுகடத்தும் பிரித்தானிய அரசின் திட்டத்தை விமர்சித்த ருவாண்டா நாட்டு அரசியல்வாதி ஒருவர், தனக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருவதாகவும், தான் உயிர் பயத்திலிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
புகலிடக்கோரிக்கையாளர்களை நாடுகடத்தும் மசோதா
பிரித்தானியாவுக்குள் நுழைந்து புகலிடம் கோருவோரின் புகலிடக்கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்வரை, அவர்களை ருவாண்டா போன்ற ஏதாவது ஒரு ஆப்பிரிக்க நாட்டுக்கு அனுப்பி அங்கு தங்கவைக்க பிரித்தானிய அரசு திட்டமிட்டுவருகிறது.
விடயம் என்னவென்றால், புகலிடக்கோரிக்கையாளர்களின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், அவர்கள் ருவண்டாவிலேயே வாழ அனுமதிக்கப்படுவார்கள் அல்லது வேறு ஏதேனும் ஒரு நாட்டுக்குத்தான் பெரும்பாலும் கொண்டு செல்லப்படுவார்களேயொழிய, அவர்கள் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பதுதான் அச்சத்தை உருவாக்கியுள்ள விடயம்.
அதாவது, இப்படி ஒரு திட்டம் இருப்பதால், சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்கு புலம்பெயர வெளிநாட்டவர்கள் பயப்படவேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கம்.
நீதிமன்றங்கள் முடிவு
சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை நாடுகடத்தும் பிரித்தானிய அரசின் திட்டம் குறித்து தீர்ப்பளித்த பிரித்தானிய உயர் நீதிமன்றம் ஒன்று, ருவாண்டா நாடு பாதுகாப்பான நாடாக கருதப்படலாம் என்று கூறியிருந்தது.
அந்த தீர்ப்பை எதிர்த்து புகலிடக்கோரிக்கையாளர்கள் பலர், சில மனிதநேயக் குழுக்கள், மற்றும் எல்லை அலுவலர்கள் யூனியன் ஒன்றும் மேல்முறையீட்டு நீதிமன்றம் சென்றனர்.
மேல்முறையீட்டு நீதிமன்றம், சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் பிரித்தானிய அரசின் திட்டம் சட்டவிரோதமானது என்று கூறியதுடன். ருவாண்டா பாதுகாப்பான நாடாக கருதப்பட்ட முடியாது என்றும் அதிரடியாக தீர்ப்பளித்தது.
தீர்ப்பை ஏற்க மறுத்த பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், உச்சநீதிமன்றம் சென்றார். ஆனால், உச்சநீதிமன்றம், ருவாண்டா திட்டம் சட்டவிரோதமானது என்னும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை ஆமோதிப்பதாக தீர்ப்பளித்தது.
ருவாண்டா திட்டத்தை விமர்சித்த பெண்
இதற்கிடையில், ருவாண்டா நாட்டு எதிர்க்கட்சி அரசியல்வாதியான Victoire Ingabire Umuhoza என்னும் பெண், ருவாண்டா அகதிகளை நடத்தும் விதம் குறித்து பிரித்தானிய ஊடகம் ஒன்றில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.
அதைத் தொடர்ந்து Victoireக்கு கொலை மிரட்டல்கள் வரத்துவங்கியுள்ளன. ருவாண்டா ஜனாதிபதியான Paul Kagameயின் உதவியாளர் ஒருவர் Victoireஐ கடுமையாக விமர்சித்துள்ளார்.
Photograph: PR
Joseph Rwagatare என்னும் அந்த நபர், Victoire தனது சொந்த நாட்டை பாதுகாப்பற்ற நாடு என்று கூறி, உலக அரங்கில் அவமானப்படுத்திவிட்டதாக கொந்தளித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து தனது ஆதரவாளர்கள் மாயமாகிவருவதாகவும், மர்மமான முறையில் கொல்லப்பட்டுவருவதாகவும் தெரிவித்துள்ள Victoire, தனக்கும் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டுவருவதாகவும், ரிஷியின் ருவாண்டா திட்டத்தை விமர்சித்ததால் தான் உயிர் பயத்திலிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |