ஒரே ஓவரில் 34 ஓட்டங்கள்! சிக்ஸர் மழை பொழிந்த வீரரின் வீடியோ
வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் ஜிம்பாப்வே அணி வீரர் ரியான் பரல் ஒரே ஓவரில் 5 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 34 ஓட்டங்கள் விளாசி வாணவேடிக்கை காட்டினார்.
வங்கதேசம் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி ஹராரேயில் நடந்து வருகின்றது. ஜிம்பாப்வே அணி முதலில் துடுப்பாட்டம் செய்தது.
அந்த அணி 55 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்துக் கொண்டிருந்தது. அப்போது களமிறங்கிய ஆல்ரவுண்டர் வீரர் ரியான் பரல், எதிரணியின் பந்துவீச்சை விளாசினார். வங்கதேச வீரர் நசும் அகமது வீசிய 15வது ஓவரை ரியான் பரல் எதிர்கொண்டார்.
முதல் நான்கு பந்துகளையும் அவர் சிக்ஸராக பறக்க விட்டு வாணவேடிக்கை காட்டினார். ஐந்தாவது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய பரல், கடைசி பந்தையும் சிக்ஸராக்கினார்.
6️⃣6️⃣6️⃣6️⃣4️⃣6️⃣
— FanCode (@FanCode) August 2, 2022
Not an over we usually see! Truly unbelievable batting from @ryanburl3!
Watch all the action from the Bangladesh tour of Zimbabwe LIVE, exclusively on #FanCode ? https://t.co/Kv4t1gRRPB @ZimCricketv @BCBtigers#ZIMvBAN pic.twitter.com/fqPsdbBmUV
இதன்மூலம் ஒரே ஓவரில் ஜிம்பாப்வே அணிக்கு 34 ஓட்டங்கள் கிடைத்தது. பரல் 28 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 54 ஓட்டங்கள் எடுத்தார்.
அவரது அதிரடி ஆட்டத்தினால் ஜிம்பாப்வே அணி 8 விக்கெட் இழப்புக்கு 156 ஓட்டங்கள் எடுத்தது.
PC: Twitter (@ICC)