அவுஸ்திரேலிய குடியுரிமையை துறந்து இந்தியனாக மாறிய வீரர்: காரணம் என்ன?
அவுஸ்திரேலிய கால்பந்து வீரர் ரியான் வில்லியம்ஸ் தமது சொந்த நாட்டின் குடியுரிமையை துறந்து, இந்திய குடியுரிமையைப் பெற்றார்.
ரியான் வில்லியம்ஸ்
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ரியான் வில்லியம்ஸ் என்ற கால்பந்து வீரர் இந்தியாவுக்காகவே விளையாட உள்ளார். 
ஆனால் இதற்காக அவர் தனது அவுஸ்திரேலிய குடியுரிமையை துறக்க நேரிட்டது. ஏனெனில், இரட்டை குடியுரிமை கொண்ட வீரர்களை இந்தியா ஏற்றுக்கொள்வதில்லை.
மும்பையில் உள்ள ஆங்கிலோ-இந்திய குடும்பத்தில் பிறந்தவர் ரியானின் தாயார். எனவே அவர் ஒரு இந்திய வம்சாவளி ஆவார்.
இந்திய ஆண்கள் கால்பந்து அணியை பிரதிநிதித்துவப்படுத்த தனது தேசியத்தை ரியான் வில்லியம்ஸ் மாற்றிக் கொண்டுள்ளார். 
தற்போது அவர் இந்திய குடியுரிமையைப் பெற்றதன் மூலம் Blue Tigers அணிக்காக விளையாட உள்ளார்.
இந்த அணிக்காக விளையாடும் முதல் வெளிநாட்டவர் ரியான் வில்லியம்ஸ் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |