விமானத்தில் கலாட்டா செய்த பிரித்தானியரை காதைப் பிடித்து இழுத்துச் சென்ற பிரான்ஸ் பொலிசார்: ஒரு வைரல் வீடியோ
குடிபோதையில் விமானத்தில் கலாட்டா செய்த பிரித்தானியர் ஒருவரை பிரான்ஸ் பொலிசார் காதைப் பிடித்து இழுத்துச் செல்லும் காட்சி ஒன்று வைரலாகியுள்ளது.
விமானத்தில் கலாட்டா செய்த பிரித்தானியர்
லண்டனிலிருந்து ஸ்பெயின் நோக்கி புறப்பட்ட Ryanair விமானம் ஒன்று, விமானத்தில் பயணித்த பிரித்தானியர்கள் சிலர் குடிபோதையில் கலாட்டா செய்ததால் பிரான்சில் தரையிறக்கப்பட்டது.
அந்த விமானத்தில் பயணித்த ஐந்து பிரித்தானியர்கள் கொண்ட குழு ஒன்று கலாட்டா செய்துகொண்டே இருந்ததுடன், அவர்களில் ஒருவரான டேனியல் (Daniel Ashley-Laws) என்பவர் விமானத்தின் அவசர காலக் கதவைத் திறக்கவும் முயன்றுள்ளார்.
அதைத் தொடர்ந்து விமானி விமானத்தை பிரான்சிலுள்ள Toulouse விமான நிலையத்தில் தரையிறக்க, பிரான்ஸ் பொலிசார் வந்து கலாட்டா செய்தவர்களை விமானத்திலிருந்து வெளியேற்ற முயன்றுள்ளனர்.
அப்போது டேனியல் கைதை எதிர்த்து கலாட்டா செய்ததால் பொலிசார் அவரைக் காதைப் பிடித்து இழுத்துச் செல்லும் காட்சிகள் சமூக ஊடகத்தில் வெளியாகியுள்ளன.
Ryanair flight takes emergency landing in Toulouse after stag do start fighting on plane 🤦♂️ pic.twitter.com/P0CwJlmbUm
— UK Fights 🇬🇧 (@krazyukfights) September 28, 2025
டேனியல், அவரது மகன் மற்றும் மூன்று பேர் கைது செய்யப்பட்டு பிரான்ஸ் பொலிசாரால் அழைத்துச் செல்லப்பட, அந்தக் காட்சியைக் கண்ட மக்கள் கைதட்டியதுடன் உற்சாகக் குரலும் எழுப்புவதை வெளியாகியுள்ள வீடியோவில் காணலாம்.
விடயம் என்னவென்றால், கைது செய்யப்பட்டு பல மணி நேரம் ஆகியும் டேனியலிடம் பொலிசாரால் விசாரணை மேற்கொள்ளமுடியவில்லையாம். அந்த அளவுக்கு அவர் கடுமையான போதையில் இருந்ததாக பிரான்ஸ் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
இதற்கிடையில், கலாட்டா செய்தவர்களை பிரான்சில் இறக்கிவிட்டுவிட்டு, இரவு 10.15 மணியளவில் அந்த விமானம் ஸ்பெயின் நோக்கிப் புறப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |