செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளுக்கு 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை
தென் கொரியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தங்களது செயற்கை சூரியன் அணுக்கரு இணைப்பில் புதிய சாதனை படைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கொரிய இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃப்யூஷன் எனர்ஜியில் உள்ள கெஸ்டாரில் (KSTAR) அணுக்கரு இணைவு 48 வினாடிகளுக்கு 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை உருவாக்கியுள்ளது.
இது சூரியனின் மையப்பகுதியை விட ஏழு மடங்கு வெப்பமானது.
முன்னதாக 2021-ஆம் ஆண்டு 30 வினாடிகளுக்கு இந்த வெப்பநிலை உற்பத்தி செய்யப்பட்டது, தற்போது அந்த சாதனையை முறியடிக்கப்பட்டுள்ளது.
2026-ஆம் ஆண்டுக்குள் 300 வினாடிகளுக்கு 100 மில்லியன் டிகிரி வெப்பநிலையை உருவாக்குவதே இலக்கு என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Korea Superconducting Tokamak Advanced Research, KSTAR, Artificial Sun, nuclear fusion reactor, South korea